Published : 17 Sep 2018 09:31 AM
Last Updated : 17 Sep 2018 09:31 AM

160 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் 160 கர்ப்பிணிகளுக்கு அரசு சார்பில் வளைகாப்பு விழா நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளைச் சேர்ந்த 7 முதல் 9 மாதம் வரையிலான கர்ப் பிணிகளுக்கு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், காஞ்சி புரம் நகரப்புறப் பகுதிகளைச் சேர்ந்த 160 கர்ப்பிணிகளுக்கு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில், மாவட்ட வருவாய்த் துறை அலு வலர் நூர்முகம்மது சிறப்பு அழைப் பாளராகக் கலந்து கொண்டு, விழாவை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்ட அதிகாரிகள், கர்ப்பிணிகளின் மகப்பேறு காலத்தில் உட்கொள்ள வேண்டிய உணவு முறை மற்றும் உடல் நலதத்தைச் சீராகப் பேணுவது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

பின்னர், அனைவருக்கும் மாலை அணிவித்து வளைகாப்பு செய்யப் பட்டு, சேலை உள்ளிட்ட சீர் வரிசை பொருட்களுடன், 5 வகையான உணவுகள் அவர் களுக்கு வழங்கப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் இதுவரை 3,480 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டுள்ளதாக, ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சற்குணா தெரி வித்துள்ளார். இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் எம்எல்ஏ. எழிலரசன், கோட்டாட்சியர் ராஜூ வட்டாட்சியர் காஞ்சனமாலா உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x