Published : 05 Sep 2018 09:54 am

Updated : 05 Sep 2018 09:54 am

 

Published : 05 Sep 2018 09:54 AM
Last Updated : 05 Sep 2018 09:54 AM

கணவரை கொன்று தற்கொலை நாடகமாடிய பெண் கைது: போதையில் தகராறு செய்ததால் கொலை; போலீஸ் விசாரணைக்குப் பிறகு மனைவி வாக்குமூலம்

கோயம்பேட்டில் கணவரை கொலை செய்துவிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய மனைவியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கோயம்பேட்டை அடுத்த ஆழ்வார்திருநகர், லட்சுமி நகர் 3-வது நெடுஞ்சாலை பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (56). இவரது மனைவி வள்ளி (45). இவர்களுக்கு பவானி (21) என்ற மகளும், கார்த்திக் (19) என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2-ம் தேதி இரவு 9.30 மணிக்கு சுந்தர்ராஜ் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக கோயம்பேடு போலீஸாருக்கு மனைவி வள்ளி தகவல் தெரிவித்தார். போலீஸார் சுந்தர்ராஜ் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சுந்தர்ராஜ் உடலில் காயங் கள் இருந்தன. எனவே, அவர் தற்கொலை செய்து கொள்ள வில்லை. அவரை யாரோ அடித்து கொலை செய்து பின்னர் தூக்கில் தொங்கவிட்டுள்ளனர் என பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து கொலை வழக்காக மாற்றி கோயம்பேடு போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

மனைவி வள்ளியிடம் நடத்திய விசாரணையில், தான் கணவரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதைத் தொடர்ந்து அவரை போலீஸார் கைது செய்து நீதிமன்றக் காவலில் புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

முன்னதாக போலீஸில் வள்ளி அளித்த வாக்குமூலம்:

நான் பூ வியாபாரம் செய்து வருகிறேன். எனது வருமானத்தை வைத்தே குடும்பத்தை நடத்தி வந்தேன். கணவர் சுந்தர்ராஜ் தினமும் கஞ்சா புகைத்துக் கொண்டு தகராறு செய்து வந்தார். அடிக்கடி என்னையும், மகளையும் அடித்து துன்புறுத்துவார்.

சம்பவத்தன்றும் தகராறு செய்தார். இதனால், ஆத்திரம் அடைந்த நான் அருகில் கிடந்த ரீப்பர் கட்டையால் அவரைத் தாக்கினேன். இதில், அவர் சுருண்டு விழுந்து பலியானார். இதை நான் எதிர்பார்க்கவில்லை. நானும் சிறைக்குச் சென்று விட்டால் மகன், மகள் வாழ்க்கை பாழாகி விடும் என்பதற்காக கணவர் தற்கொலை செய்து கொண்டதுபோல் நாடக மாடினேன். இவ்வாறு வள்ளி கூறிய தாக போலீஸார் தெரிவித்தனர்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author