

இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு எதிராக நடைபெறும் கருப்பு தின போராட்டத்தின் ஒரு பகுதியாக திமுக தலைவர் கருணாநிதியின் ஃபேஸ்புக் பக்கத்தின் கவர் போட்டோ, புரொஃபைல் ஃபோட்டோவும் கருப்பு நிறமாக மாற்றப்பட்டுள்ளன.
இலங்கை அதிபர் ராஜபக்ச இன்று ஐ.நா.சபை கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். இதற்காக ராஜபக்சவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 25-ந்தேதி அன்று அவரவர் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி வைப்பதோடு கருப்புசட்டை அணிதல், கறுப்பு சின்னம் அணிதல் ஆகியவற்றின் மூலம் கடும் கண்டனத்தை எதிரொலித்திடுவோம் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
ஐ.நா. பொதுக்கூட்டத்தில் ராஜபக்ச கலந்து கொள்ளும் இன்றைய தினத்தை (செப்டம்பர் 25) திமுகவினர் கருப்பு தினமாக கடைபிடித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, திமுக தலைவர் கருணாநிதியின் ஃபேஸ்புக் பக்கத்தின் கவர் ஃபோட்டோ, புரொஃபைல் போட்டோவும் கருப்பு நிறமாக மாற்றப்பட்டுள்ளன.