Last Updated : 28 Sep, 2018 09:46 AM

 

Published : 28 Sep 2018 09:46 AM
Last Updated : 28 Sep 2018 09:46 AM

சிலை கடத்தலைத் தடுக்க தமிழகம் முழுவதும் ஆயுத பயிற்சியுடன் கூடிய 2,000 பாதுகாப்பு படையினர் நியமனம்: இந்து சமய அறநிலையத் துறை முடிவு

சிலைக் கடத்தலைத் தடுக்க தமி ழகம் முழுவதும் ஆயுதப் பயிற்சி யுடன் கூடிய 2,000 பாதுகாப்புப் படையினரை நியமிக்க இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் 42,000-க் கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இவற்றில், ஆயிரக்கணக்கான சிலைகள் காணாமல் போயுள்ளன. இதுதொடர்பாக, சிலைக் கடத் தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன். மாணிக்கவேல் விசாரணை நடத்தி வருகிறார். பல சிலைகள் வெளி நாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளன. அவற்றை, மீட்கும் முயற்சியில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரி வினர், தீவிரமாக ஈடுபட்டு வரு கின்றனர்.

இந்நிலையில், சிலைகள் அந்தந்த கோயில் ஊழியர்களின் துணையுடன் வெளிநபர்கள் மூலம் கடத்தப்படுவதாக பல்வேறு அமைப்பினர் குற்றம்சாட்டி வரு கின்றனர்.

கோயில்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழகம் முழுவதும் அந்தந்த கோயில் நிர்வாகத்தினர் மூலம் தனியார் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இருப் பினும், பாதுகாப்புப் பணியை இவர்களால் சிறப்பாக மேற் கொள்ள முடியவில்லை.

தொடர்கதையாகும் திருட்டு

சிலை, நகைகள் காணாமல் போவது தொடர்கதையாக இருந்து வருகிறது. எனவே, சிலை, கோயில் களுக்கு சொந்தமான நகைகளைப் பாதுகாக்க எடுக்க வேண்டிய நட வடிக்கைகள் குறித்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், தமிழகம் முழுவ தும் சிலைக் கடத்தலைத் தடுக்க வும், கோவில்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் பாதுகாப்புப் படைகளை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, 2,000 பாதுகாப் புப் படையினர் நியமிக்கப்பட உள் ளனர். இவர்களுக்கு காவல்துறை மூலம் ஆயுதப் பயிற்சி வழங்கப் பட உள்ளது. பணியில் இருக்கும் போது, துப்பாக்கியுடன் பாதுகாப் புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதனை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அனைத்து கோயில்களிலும் சிலை பாதுகாப் புப் படையினரை பணியமர்த்த இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, இந்து சமய அற நிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: காவல்துறையினர் எப்போதும் கோவில் பாதுகாப்பில் மட்டும் கவனம் செலுத்த முடி யாது. எனவே, இந்து சமய அறநிலை யத்தின் மூலம் பாதுகாப்புப் படையை உருவாக்க முடிவு செய்துள்ளது.

24 மணி நேரமும்...

முதற்கட்டமாக, 2,000 பாதுகாப் புப் படையினரை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. இவர்கள் 24 மணி நேரமும் ஷிப்ட் முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். இவர்களுக்கு காவல்துறை மூலம் ஆயுதப் பயிற்சி வழங்க முடிவு செய்துள்ளோம்.

இதைத் தொடர்ந்து, ஒவ்வொரு வருக்கும் தனித்தனியாக துப்பாக்கி கள் வழங்கப்படும். இதன் மூலம், இரவு நேரங்களில் யாரேனும் கொள்ளையடிக்க வந்தால் அவர் களை சுலபமாக சமாளிக்க முடி யும்.

இவர்கள், முக்கிய கோயில் களில் பணி அமர்த்தப்பட்ட பிறகு, படிப்படியாக தமிழகம் முழுவ தும் உள்ள அனைத்து கோயில் களுக்கும் நியமிக்கப்படுவார்கள்.

சிலை, கோயிலுக்கு சொந்தமான நகை உள்ளிட்டவற்றை பாது காப்பது மட்டுமே இவர்களின் பிரதான பணியாக இருக்கும். இதன் மூலம், கோயில்களில் சிலை, நகைகள் கொள்ளையடிப்பது தடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x