Published : 13 Sep 2018 07:55 AM
Last Updated : 13 Sep 2018 07:55 AM

புயலால் பாதிக்கப்படும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மாவட்ட நிர்வாகங்களுக்கு வருவாய்த்துறை சுற்றறிக்கை 

வடகிழக்கு பருவமழை மற்றும் புயலால் பாதிக்கப்படும் பகுதி களில் முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை எடுக்க உத்தரவிட்டு மாவட்ட நிர்வாகங்களுக்கு வரு வாய்த் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

வடகிழக்கு பருவமழை தமிழகத் தில் அக்டோபர் மாதம் தொடங் கவுள்ளது. இந்நிலையில் சென்னை எழிலக வளாகத்தில் உள்ள மாநில கட்டுப்பாட்டு அறையில், வடகிழக்கு பருவமழை மற்றும் அக்காலகட்டத்தில் உருவாகும் புயல்களை எதிர்கொள்ள தேவை யான முன்னெச்சரிக்கை நடவடிக் கைகள் குறித்து மாவட்டங்களுக்கு வருவாய்த்துறை சார்பில் அனுப் பும் சுற்றறிக்கைகள் குறித்த கையேடுகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டார். வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால், பேரிடர் மேலாண்மை ஆணையர் ராஜேந் திர ரத்னு ஆகியோர் இதை பெற்றுக் கொண்டனர்.

பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து சுற்றறிக்கைகளில் கூறியிருப்பதாவது:

ஒவ்வொரு ஆண்டும் 48 சதவீதம் மழையை வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகம் பெறுகிறது. இந்த பருவமழை காலத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை முதல் சில நேரங் களில் புயல்கள் வரை உருவாகி அதிகளவு மழை பொழிகிறது. மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் மாவட்டங்களில் நீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து, வகைப் படுத்தி வரைபடம் தயாரித்து தயார் நிலையில் இருக்க வேண்டும். அனைத்து விதமான ஆக்கிரமிப்பு களையும் அகற்ற வேண்டும்.

மாவட்ட அளவில் அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய குழுக்களை உருவாக்க வேண்டும். அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதி களுக்கு சிறப்பு குழுக்களை அமைக்க வேண்டும். கல்வி நிறுவனங்களை எச்சரித்து மின் இணைப்புகள், கழிவுநீர் வெளியேற் றும் அமைப்புகள் உள்ளிட்டவற்றை முறையாக பராமரிக்க உத்தரவிட வேண்டும். மருத்துவமனைகள் தேவையான ஜெனரேட்டர்களை, பாதுகாப்பான இடத்தில் பொருத்த வும், டீசலை அதிகளவில் இருப்பு வைக்கவும் அறிவுறுத்த வேண்டும். மழைக்குப்பின், பொதுமக்களை மீட்டு தங்க வைக்கவும், அவர்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவ உதவிகள் செய்வதற் கான வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும்.

புயல் தொடர்பாக 4 விதமான எச்சரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். முதல் எச்சரிக்கை, பாதிக்கப்படும் பகுதி குறிப்பிடாமல் விடுக்கப்படும். அடுத்ததாக 48 மணி நேரத்துக்கு முன்னரும், 3-வதாக 24 மணி நேரம், இறுதியாக 12 மணிநேரத்துக்கு முன்னரும் எச்சரிககை விடுக்கப்படும். அந்த காலகட்டத்தில், முக்கியமான இலக்கு பகுதிகளை அறிந்து வைத்திருக்க வேண்டும். பொது மக்களுக்கு பாதிப்புகள் குறித்து ஊடகங்கள் மற்றும் ஒலிபெருக்கி கள் மூலம் அறிவுறுத்த வேண்டும். நீர்த்தேக்கங்கள், அணைகளில் இருந்து நீர் திறக்கப்படும் போது தாழ்வான பகுதிகளில் வசிப்போரை எச்சரித்து, பாதுகாப்பான இடங் களுக்கு செல்லுமாறு அறிவுறுத்த வேண்டும்.

புயல் தாக்குதலுக்குப்பின், காணாமல் போனவர்கள், இறந்த வர்கள், காயமடைந்தவர்கள், சொத்து சேதங்கள் குறித்து கணக்கிட தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். இவற்றை மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள் பின் பற்றி, தொடர்ந்து நிகழ்வு களின் விவரங்களை வருவாய் நிர்வாக ஆணையருக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக் கைகளில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x