Published : 04 Sep 2014 12:19 PM
Last Updated : 04 Sep 2014 12:19 PM

8 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் கோ-ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குநர் உட்பட 8 ஐஏஎஸ் அதிகாரிகள் புதன்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் விவரம்: (அவர்கள் வகித்த பழைய பதவி அடைப்புக் குறிக்குள்)

யு.சகாயம் - இந்திய மருத்துவ இயக்குநர் (கோ-ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குநர்)

அபூர்வா - கோ-ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குநர் (இந்திய மருத்துவ இயக்குநர்)

சமயமூர்த்தி - வேலை வாய்ப்புத்துறை இயக்குநர் (ஊரக வளர்ச்சி இணை இயக்குநர்)

தேவ்ராஜ் தேவ் - ஒழுங்கு நடவடிக்கை ஆணையர் (மனித உரிமை கமிஷன் செயலாளர்)

வீரசண்முகமணி - தொழிலாளர் துறை செயலாளர் (தொழிலாளர் துறை இயக்குநர்)

இவர்கள் தவிர மேலும் 3 அதிகாரிகள் இடமாற்றம் செய் யப்பட்டுள்ளனர்.

எரிசக்தித்துறை செயலாளர் ராஜேஷ் லக்கானிக்கு கூடுதல் பொறுப்பாக சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x