Published : 20 Sep 2018 10:12 AM
Last Updated : 20 Sep 2018 10:12 AM

இறுதிப் போரில் வெற்றிக்கு காங்கிரஸ் கூட்டணி அரசு உதவி; ராஜபக்சே கருத்துக்கு ஸ்டாலின் பதிலளிப்பாரா?- தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி

இலங்கையில் நடந்த இறுதிப் போரில் வெற்றி பெற காங்கிரஸ் கூட்டணி அரசு உதவி செய்ததாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார். இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதிலளிப்பாரா என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை தி.நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலக மான கமலாலயத்தில் ‘தூய்மையே உண்மையான சேவை' என்ற நிகழ்ச்சியை தொடங்கி வைத்த தமி ழிசை, அலுவலகம் அமைந்துள்ள வைத்தியராமன் தெருவில் பாஜக தொண்டர்களுடன் இணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசை அப்புறப்படுத்துவோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். ஜெயலலிதா மறைந்த பிறகு முதல்வர் பழனிசாமி அரசையே திமுகவால் வீழ்த்த முடியவில்லை. ஒரு மாநிலத்தை ஆளும் அதிமுகவையே எதிர்க்க முடியாத ஸ்டாலினால் 22 மாநிலங்களை ஆளும் பாஜகவை எப்படி அப்புறப்படுத்த முடியும்?

15 ஆண்டுகளுக்கு மேலாக மத்திய அரசில் திமுக செல்வாக் கோடு இருந்தது. ஒரு கட்டத்தில் திமுகவைச் சேர்ந்த 8 பேர் மத்திய அமைச்சர்களாக இருந்தனர். ஆனாலும் தமிழகத்துக்கு எதையும் செய்யவில்லை. காவிரி, முல்லை பெரியாறு உள்ளிட்ட நதிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

இலங்கையில் நடந்த இறுதிப் போரில் வெற்றி பெற காங்கிரஸ் கூட்டணி அரசு உதவி செய்ததாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் ராஜபக்சே பகிரங்கமாக தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சே அரசுக்கு உதவிய காங்கிரஸ் கட்சிக்கு திமுகவும், மதிமுகவும் இன்று வெண் சாமரம் வீசிக் கொண்டிருக்கின்றன. காங்கிர ஸுடன் கூட்டணியில் இருப்பதால் ராஜபக்சேவின் ஒப்புதல் வாக்குமூலத்துக்கு பதிலளிக்காமல் திமுக மவுனம் சாதிக்கிறது. ராஜபக்சேவின் கருத்துக்கு ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும்.

மத்தியில் பாஜக ஆட்சியில் உள்ளது. தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் உள்ளது. எனவே, மக்கள் நலத் திட்டங்களை செயல் படுத்துவதற்காக இரு அரசுகளும் இணக்கமாக உள்ளன. ஆட்சி வேறு, கட்சி வேறு. கட்சி ரீதியாக அதிமுகவுடன் எந்த உறவும் இல்லை. கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை.

இவ்வாறு தமிழிசை கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x