Published : 08 Sep 2018 09:31 AM
Last Updated : 08 Sep 2018 09:31 AM

கேன்டீனில் அதிக விலைக்கு பொருட்களை விற்ற 114 திரையரங்குகள் மீது நடவடிக்கை: தொழிலாளர் ஆணையரகம் தகவல் 

தொழிலாளர் ஆணையர் அலுவல கம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக சினிமா திரையரங்கு களில் உள்ள கேன்டீன், உணவகம், ஸ்டால்கள் போன்றவற்றில் விற்கப் படும் பொட்டலமிடப்பட்ட பொருட் கள், உணவுப்பொருள் பாக்கெட் கள், குளிர்பானங்கள், தண்ணீர் பாக்கெட்கள் ஆகியவை அதில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதலாக விற்கப்படுவதாக புகார்கள் வந்தன.

இதையடுத்து, தவறு செய்யும் திரையரங்கு உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க தொழிலாளர் ஆணையர் இரா. நந்தகோபால் உத்தரவிட்டார். இதையடுத்து தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் தலைமையில் தனிப்படை அமைத்து நேற்று முன்தினம், நேற்று (இரு தினம்) ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

திரையரங்குகளில் ஆய்வு

தமிழகத்தில் 335 திரையரங்குகளில் ஆய்வு நடந்தது. இதில் தண்ணீர், குளிர்பானம், உணவு பாக்கெட்களில் குறிப்பிட்ட விலைக்கு அதிகமாக விற்ற 72 திரையரங்கு கேன்டீன் உரிமை யாளர்கள், பொட்டலப் பொருட்கள் அடைக்கப்பட்ட பாக்கெட்கள் மீது தயாரிப்பாளர் முழு முகவரி, அதிக பட்ச சில்லறை விலை, பொருள் அடைக்கப்பட்ட நாள், உபயோ கிக்க வேண்டிய காலம் போன்ற விவரங்கள் அச்சிடப்படாமல் விற்ற 38 திரையரங்கு உரிமையாளர்கள், 4 நிறுவனங்கள் என 114 திரையரங்கு, கேன்டீன் உரிமையாளர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது.

இதேபோல் திரையரங்குகள், பேருந்து, ரயில் நிலையங்கள், ஓட்டல்கள், சாலையோர உணவகங் கள், பல்பொருள் அங்காடிகள் போன்ற இடங்களில் விற்கப் படும் பொருட்கள் அடைக்கப் பட்ட பாக்கெட்களில் குறிப்பிடப்பட் டுள்ள விலைக்கு மேல் விற்கப் படுதல், பெட்ரோல், டீசல் பங்கு களில் அளவு குறைதல் உள்ளிட்ட புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்காக தொழிலாளர் துறையால் அறிமுகப்படுத்தப் பட்டுள்ள ‘TN-LMCTS’ என்ற கைபேசி செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து, நுகர்வோர், பொதுமக்கள் புகார் அளித்து உரிய நிவாரணம் காணலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x