Published : 27 Sep 2018 10:35 am

Updated : 27 Sep 2018 10:35 am

 

Published : 27 Sep 2018 10:35 AM
Last Updated : 27 Sep 2018 10:35 AM

எஸ்ஆர்எம் பல்கலை.வேலைவாய்ப்பு முகாமில் 3000 பேருக்கு வேலை

3000

எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத் தில் சமீபத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் ஒரே நாளில் 3 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதுகுறித்து வெளியிடப் பட்டுள்ள செய்திக் குறிப்பு:


எஸ்ஆர்எம்ஐஎஸ்டி வேலை வாய்ப்பு முகாமில் டிசிஎஸ், இன்போசிஸ், காக்னிசன்ட், விப்ரோ உள்ளிட்ட 540 தொழில் நிறுவனங்கள் பங்கேற்றன. தைவான் நாட்டைச் சேர்ந்த நிறு வனங்களும் இதில் பங்கேற்றன. இந்த நிறுவனங்கள் சுமார் 3 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளன.

இன்போசிஸ் நிறுவனம் 1185 பேருக்கு வேலை வாய்ப்பை வழங்க முன்வந்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.38.5 லட்சம் ஊதியத்துடன் வேலை வாய்ப்பை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. பல்வேறு நிறு வனங்கள் ஆண்டு ஊதியமாக ரூ.18 லட்சம் அளவுக்கு வழங்க முன்வந்துள்ளன.

தற்போது வேலைவாய்ப்பு ஆணைகளை பெற்றுள்ள மாணவர்கள் வரும் ஆண்டு முதல் பணியில் சேருவார்கள். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x