Published : 30 Apr 2014 11:21 AM
Last Updated : 30 Apr 2014 11:21 AM

முஸ்லிம்கள் உள்ஒதுக்கீட்டுச் சட்டத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி வழக்கு: பிற்பட்டோர் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங் கும் சட்டத்தை செல்லாது என அறிவிக்கக் கோரிய மனுவுக் குப் பதிலளிக்க தமிழக பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறைச் செயலருக்கு உயர் நீதிமன்றக் கிளை உத்தர விட்டுள்ளது.

மதுரை இந்து விகாஸ் சமிதி நிர்வாகி எம்.திருமலை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் 1993-ம் ஆண்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு 30 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட் டோருக்கு 20 சதவீதம், ஆதி திராவிடர்களுக்கு 18, பழங்குடி யினருக்கு 1 சதவீதம் என 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கி சட்டம் கொண்டுவரப்பட்டது. பிற்படுத்தப் பட்டோர் வகுப்பில் முஸ்லிம்கள் உள்ளனர். இந்நிலையில் 2007-ம் ஆண்டில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி சட்டம் கொண்டுவரப்பட்டது.

இந்தச் சட்டத்தில் பிற்படுத்தப்பட் டோர் பிரிவில் உள்ள மற்ற ஜாதியினருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 30 சதவீதத்தில் 3.5 சதவீதம் உள்ஒதுக்கீடு முஸ்லிம்களுக்குச் செல்வதால் எஞ்சிய 26.5 சதவீத இடத்தில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள மற்ற ஜாதியினர் போட்டியிடும் நிலை உள்ளது. முஸ்லிம்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கியது சட்டவிரோதம். இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது.

ஆந்திரத்தில் முஸ்லிம்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அது செல்லாது என அந்த மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே, தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி 2007-ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை அரசியலமைப்பு சட்டத் துக்கு எதிரானது என்றும், சட்டம் செல்லாது என்றும் அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப் பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் வி.ராமசுப் பிரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவுக்குப் பதிலளிக்க தமிழக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தபட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை செயலர் பதிலளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x