பாலாற்றில் தடுப்பணை கட்ட நிதி ஒதுக்க வேண்டும்: விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

பாலாற்றில் தடுப்பணை கட்ட நிதி ஒதுக்க வேண்டும்:  விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
Updated on
1 min read

பாலாற்றில் 7 இடங்களில் தடுப் பணை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக முதல்வர் கூறியுள்ளதால், அதற்கான நிதி ஒதுக்கீடு அறிவிப்புகளை வெளி யிட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரம் நகரப் பகுதியில், பேருந்து நிலையம் அருகே கடந்த 15-ம் தேதி அதிமுக வின் பொதுக்கூட்டம் நடைபெற் றது. இதில், தமிழக முதல்வர் பழனிசாமி கலந்துகொண்டார். அப்போது, நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், பாலாற்றில் 7 இடங்களில் தடுப்பணை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

இந்நிலையில், நிதி ஒதுக்கீடு செய்யாமலேயே தடுப்பணை அமைக்கும் பணிகள் நடை பெற்று வருதாக முதல்வர் கூறி, விவசாயிகளை ஏமாற்றி வருவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் காஞ்சி மாவட் டச் செயலாளர் நேரு கூறியதாவது: பாலாற்றில் தடுப்பணை அமைப்ப தற்காக அரசு சார்பில் இதுவரை நிதி ஒதுக்கீடு செய்ததாக அறிவிப்பு வெளியிடப்படாத நிலையில், 7 இடங்களில் தடுப் பணை அமைக்கும் பணிகள் நடை பெற்று வருவதாக முதல்வர் பொதுக்கூட்டத்தில் தெரிவித் திருப்பது, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை ஏமாற்றும் செய லாகும். எனவே, தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் முதல்வரின் பேச் சுக்கு கண்டனம் தெரிவிக்கிறது.

மேலும், வண்டலூரில் நடை பெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர், பாலாற்றில் 7 இடங்களில் தடுப் பணை அமைக்கப்படும் என அறிவித்தார். ஆனால், அரசு சார்பில் இதுவரையில் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. அதனால், முதல்வரின் அறிவிப்பை நிறைவேற்றும் வகையில், பாலாற் றில் தடுப்பணை அமைக்க உட னடியாக நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான அறிவிப்புகளை அரசு வெளியிட வேண்டும் என முதல் வருக்கு கோரிக்கை விடுக்கி றோம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in