Published : 24 Sep 2018 09:13 AM
Last Updated : 24 Sep 2018 09:13 AM

ரயில் சீசன் டிக்கெட்டில் கையொப்பமிட இடம் இல்லை: பயணிகள் அபராதம் செலுத்தும் நிலை

கணினி மூலம் வழங்கப்படும் மாதாந்திர ரயில் சீசன் டிக்கெட்டில் பயணிகள் கையொப்பம் இடுவதற் கான இடம் இல்லாததால், பயணிகள் அபராதம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

புறநகர் மின்சார ரயில்களில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்கிறார்கள். குறிப்பாக, புறநகர் பகுதிகளான தாம்பரம், செங்கல்பட்டு, கும்மிடிப் பூண்டி, மீஞ்சூர், பொன்னேரி, அரக்கோணம், திருவள்ளூர், திருத்தணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு ஏராளமானவர்கள் ரயிலில் வந்து செல்கின்றனர்.

இவ்வாறு தினசரி ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக, ரயில்வே நிர்வாகத் தால் சீசன் டிக்கெட் வழங்கப் படுகிறது. இப்பயணச் சீட்டுகள் மாதம்தோறும், 3 மாதம், 6 மாதம் என்ற அடிப்படையில் வழங்கப்படு கின்றன.

இப்பயணச்சீட்டை எடுத்த சம்மந்தப்பட்ட பயணிதான் அதைப் பயன்படுத்தி பயணம் செய்கிறாரா என்பதை உறுதிப் படுத்துவதற்காக, சீசன் டிக்கெட்டில் சம்மந்தப்பட்ட பயணி கையொப்பம் இட வேண்டும். இதற்காக, சீசன் டிக்கெட்டில் கையொப்பம் இடுவது குறித்து குறிப்பிடப்பட்டிருக்கும். மேலும், ரயில்வே விதிப்படி சீசன் டிக்கெட்டில் பயணியின் கையொப்பம் இல்லை என்றால் அது செல்லாத டிக்கெட்டாக கருதி அபராதம் விதிக்கப்படும்.

இந்நிலையில், தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர சீசன் டிக்கெட்டில் கையொப்பம் இடுவது குறித்த வாசகம் குறிப்பிடப்படவில்லை. இதனால், புதிதாக சீசன் டிக்கெட் வாங்கும் பயணிகள், டிக்கெட்டில் கையொப்பம் இடாமல் பயணம் செய்கின்றனர்.

அப்போது, டிக்கெட் பரிசோதகர் சீசன் டிக்கெட்டில் கையொப்பம் இல்லை எனக் கூறி அபராதம் விதிக்கின்றனர். சில நேரங்களில் பயணிகளுக்கும், டிக்கெட் பரிசோதகர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்படு கிறது.

எனவே, இத்தகைய பிரச்சி னைகளை தவிர்க்கும் வகையில், சீசன் டிக்கெட்டில் கையொப்பம் இடுவதற்கான இடத்தை அச்சடித்து வெளியிட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x