Published : 25 Sep 2014 11:20 AM
Last Updated : 25 Sep 2014 11:20 AM

விடுதி குளியலறையில் செல்போனில் படம் பிடித்த விவகாரம்: காஞ்சிபுரம் தனியார் பல்கலையில் கலவரம்

காஞ்சிபுரம் அருகே உள்ள சங்கரா நிகர்நிலை பல்கலைக்கழக விடுதி குளியலறையில் மாணவி களை செல்போனில் படம் பிடித்த தாக கூறப்படும் விவகாரத்தில் மாணவர்களின் போராட்டம் கலவர மாக மாறியது. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூரில் சங்கரா நிகர்நிலை பல்கலைக்கழகம் அமைந் துள்ளது. இங்குள்ள மாணவிகள் விடுதியில் மின்சாரம் பழுது பார்க்கும் பணிக்காக ஏனாத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜா (33) என்பவர் செவ்வாய்க் கிழமை வந்தார். அப்போது குளிய லறையில் இருந்த மாணவியை அவருக்கு தெரியாமல் செல் போனில் படம்பிடித்ததாக தெரிகிறது. இதைப் பார்த்த சக மாணவிகள் அவரைப்பிடித்து நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளனர். ஆனால், அவர் மீது கல்லூரி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதைக்கண்டித்து ஏராளமான மாணவ, மாணவிகள் ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். பின்னர் ஆட்சியர் சண்முகத்திடம் மாணவிகள் குளியலறையில் ரகசியமாக படம் படிக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருவதாக புகார் தெரிவித்தனர். இதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார். இதனிடையே செல்போனில் படம் பிடித்த விவகாரத்தில் வார்டன் ஜோதிபிரபா அளித்த புகாரின்பேரில் ராஜாவை தாலுகா போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் நிர்வாகத்தைக் கண்டித்தும், விடுதியின் தலைமை காப்பாளர் வாசுதேவன் மற்றும் வார்டன் ஜோதிபிரபா ஆகியோரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் பல்கலைக்கழகம் முன்பு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களுடன் நிர்வாகம் தரப்பில் நடத்திய பேச்சுவார்த்தையில் இருவரையும் பணி நீக்கம் செய்ய ஒப்புக்கொள்ளப்பட்டது. பின்னர் 10 நாள் விடுமுறை அறிவித்தது. இந்த விடுமுறையை மாணவர்கள் ஏற்கவில்லை. நிர்வாகத்தை கண்டித்து முழக்கம் எழுப்பினர். போராட்டம் சிறிது நேரத்தில் கலவரமாக வெடித்தது.

அங்கு நிறுத்தி வைக்கப் பட்டிருந்த பல்கலைக்கழக பேருந் துகள் மீது கல்வீசி சேதப்படுத்தப் பட்டன. கார், வேன் என 48 வாகனங்கள் அடித்து நொறுக்கப் பட்டன. ஒரு பேருந்துக்கு தீ வைக்கப்பட்டது. பாதுகாப்புக்கு வந்த போலீஸ் வாகனங்களும் கல்வீச்சுக்கு தப்பவில்லை. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

காவல்துறை வடக்கு மண்டல டிஐஜி சத்தியமூர்த்தி. எஸ்பி விஜயகுமார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பின்னர் மாணவர்களை போலீஸார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர். இருப்பினும் பதற்றம் நீடிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x