Published : 10 Sep 2018 09:31 AM
Last Updated : 10 Sep 2018 09:31 AM

செல்போன் வாங்கி தராததால் தீக்குளித்த கல்லூரி மாணவி; செல்போன் கொடுத்து பழக்கப்படுத்தாதீர்கள்: பெற்றோர்களுக்கு டாக்டர்கள் அறிவுரை

செல்போன் வாங்கி தராததால் கல்லூரி மாணவி தீக்குளித்து இறந்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த மன நல மருத்துவர்கள், குழந்தை களுக்கு செல்போன் கொடுத்து சிறு வயதில் இருந்தே பழக்கப் படுத்தாதீர்கள் என பெற்றோருக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர். கொத்தனார் வேலை செய்கிறார். சென்னை கொளத்தூர் ஜிகேஎம் காலனியில் குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவரது மகள் மாலதி (18). கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். தனது தோழிகள் வைத்துள்ளதைப் போல தனக்கும் ஸ்மார்ட் போன் வேண்டும் என தந்தையிடம் நீண்ட நாட்களாக மாலதி கேட்டு வந்துள்ளார். பிறந்த நாள் அன்று வாங்கி தருவதாக பாஸ்கர் உறுதி அளித்திருந்தார். கடந்த வியாழக்கிழமை மாலதி பிறந்தநாள். ஆனால் சொன்னபடி, பாஸ்கரால் போன் வாங்கித் தரமுடியவில்லை. அவரும் சமாதானம் செய்திருக்கிறார்.

இந்நிலையில் மாலதி நேற்று இரவு தனக்கு தானே தீ வைத்துக் கொண்டு வலியால் துடித்தார். இதனால் பெற்றோரும் உறவினர் களும் அதிர்ச்சி அடைந்தனர். கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று, மாலதியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். அவர் ஏற்கெனவே இறந்து விட்ட தாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கொளத்தூர் போலீஸார் இது குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து கேட்டபோது மன நல மருத்துவர்கள் கூறியதாவது:

முன்பு குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே சென்று மற்ற குழந்தைகளுடன் விளையாடினர். தற்போது தகவல் தொழில் நுட் பத்தின் வளர்ச்சியால் குழந்தைகள் வெளியே செல்வதை தவிர்த்து வீட்டுக்குள்ளேயே கம்ப்யூட்டர், செல்போனில் நேரத்தை செலவிடு கின்றனர். பெற்றோர்களும் இதை கண்டு கொள்வதில்லை.

குழந்தைகளுக்கு சிறுவயது முதலே தங்களது செல் போனை கொடுத்து பழக்கப்படுத்து கின்றனர். வளர்ந்த பின்னர் தனக்கும் அதுபோன்று வேண்டும் என பிள்ளைகள் ஆசைப்படுகின்றனர். அது கிடைக்காத விரக்தியில் சில பிள்ளைகள் கையை அறுத்துக் கொள்வேன், மாடியில் இருந்து குதித்து விடுவேன் என அச்சுறுத்து கின்றனர். சில நேரங்களில் விபரீத முடிவிலும் ஈடுபடுகின்றனர்.

எனவே, பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் கேட்பதை எல்லாம் உடனே வாங்கி கொடுப் பதை தவிர்க்க வேண்டும். சிறு வயது முதலே தங்களின் நிலைமையை பிள்ளைகளுக்கு புரிய வைக்க வேண்டும். கேட்பதை எல்லாம் வாங்கி கொடுத்து பழக்கப்படுத்தி விடக்கூடாது.

எது சரி, எது தவறு என்பதை சரியான வகையில் புரிய வைக்க வேண்டும். பிள்ளைகளும் தங்களின் பெற்றோர் எது செய்தா லும் சரியாகத்தான் இருக்கும் என நினைத்து செயல்பட வேண்டும். சகிப்புத் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x