கல்பாக்கம் அணுமின் நிலைய தேவைக்காக பாலாற்றில் ராட்சத குழாய் அமைத்து தண்ணீர் உறிஞ்ச கிராம மக்கள் எதிர்ப்பு

கல்பாக்கம் அணுமின் நிலைய தேவைக்காக பாலாற்றில் ராட்சத குழாய் அமைத்து தண்ணீர் உறிஞ்ச கிராம மக்கள் எதிர்ப்பு
Updated on
1 min read

திருக்கழுக்குன்றம் அருகே பாலாற்றில் ஆழ்துளை கிணறு அமைத்து ராட்சத குழாய் மூலம் தண்ணீர் உறிஞ்சும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் முயற் சிக்கு நல்லாத்தூர் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை யிட்டனர்.

கல்பாக்கம் அணுமின் நிலை யம் மற்றும் அணுமின் நிலைய குடியிருப்புகளின் குடிநீர் தேவைக்காக நல்லாத்தூர் பகுதி யில் உள்ள பாலாற்றில் 20 ராட்சத ஆழ்துளை கிணறுகள் அமைத்து தினமும் 5 எம்ஜிடி அளவில் குடிநீர் எடுத்து வருகின்றனர். அதனால், நல்லாத்தூர் கிராமப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால், விவசாய நிலங்கள் தண்ணீர் இன்றி வறண்டுபோகும் நிலை ஏற்பட்டுள்ளதாக கிராமத்தினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், நல்லாத்தூர் ஊராட்சிக்குட்ட கிராமப் பகுதியில் உள்ள பாலாற்றில் கூடுதலாக ராட் சத ஆழ்துளை கிணறுகள் அமைப் பதற்கான பணிகள் மேற்கொள் ளப்பட்டன. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகள் மற்றும் வாகனங்களை முற்றுகை யிட்டனர். இப்போராட்டம் குறித்து தகவல் அறிந்த திருக்கழுக்குன்றம் போலீஸார் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். எனினும், அப்பகுதியில் ஏராளமான போலீ ஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புடன் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றன. இந்த சம்பவத்தால், கல்பாக்கம் அணுமின் நிலைய பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நிறைவேறாத வாக்குறுதிகள்

அணுமின் நிலைய நிர்வாகம் ஏற்கெனவே இப்பகுதியில் இருந்து குடிநீர் பெறுவதற்காக, இங்கு உள்ள இளைஞர்களுக்கு வேலை மற்றும் ஊராட்சி பகுதியில் அடிப்படை தேவை கள் உள்ளிட்டவைகளை மேம் படுத்தி தருவதாக உறுதி அளித்தி ருந்தனர் ஆனால், இதுவரை நடவடிக்கைகள் எதுவும் எடுக்க வில்லை. இதனால் ஆழ்துளை கிணறுகள் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in