Published : 16 Apr 2014 11:45 AM
Last Updated : 16 Apr 2014 11:45 AM

தனி கவுன்சலிங் மையம், ஹெல்ப் லைன், உண்மை அறியும் குழுவை அமைக்க வேண்டும்: அரசிடம் திருநங்கைகள் கோரிக்கை

திருநங்கைகளுக்காக தனி கவுன் சலிங் மையம், ஹெல்ப் லைன், உண்மை அறியும் குழுவை அமைக்க வேண்டும் என்று அரசி டம் திருநங்கைகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு, வி கம்யூனிட்டி ஆக்‌ ஷன் நெட்வொர்க் (VCAN) சார்பில் திருநங்கைகளின் உரிமைக ளுக்கு ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் உள்ள இக்சா மையத்தில் செவ் வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சுதா பேசுகையில், “உங்களுக்கென ஒரு வட்டத்தை போட்டுக்கொள்ள வேண்டாம். எல்லோரிடமும் இணைந்து செயல்படுங்கள். உங்களுடைய பிரச்சினைகளை சொன்னால், அதனை நாங்கள் தீர்த்துவைப்போம்” என்றார்.

சட்டப் பாதுகாப்பு

சென்னை உயர் நீதிமன்ற வழக் கறிஞர் சுமித்ரா சக்கரவர்த்தி கூறுகையில், “தமிழகத்தில் திருநங்கைகளை 3-ம் பாலினத் தவர் என அறிவித்து, அவர் களுக்கு தேர்தலில் வாக்களிக்கும் உரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல இந்திய அளவில் திருநங்கைகளை 3-ம் பாலினமாக அறிவித்து, தேர்தலில் வாக்களிக்கும் உரிமைக் கான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தற்போது வழங்கியுள்ளது. திரு நங்கைகள் தினத்தில், இந்த தீர்ப்பு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சமூகத்தில் திருநங்கைகள் நன்றாக படித்து பல துறைகளில் முன்னேறி வருகின்றனர். ஆண், பெண்ணுக்கு சட்டப் பாதுகாப்பு இருக்கிறது. அதே போல திருநங் கைகளுக்கும் சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்றார்.

தனி கவுன்சலிங் மையம்

வி கம்யூனிட்டி ஆக்‌ஷன் நெட் வொர்க் தலைவர் ஆர்.ஜீவா பேசுகையில், “தமிழகத்தில் ஆண்டுதோறும் திருநங்கைகள் தினம் கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு திருநங்கைகள் தினத்தை அனுசரிக்க வேண்டியதாகியுள் ளது. திருநங்கைகளுக்கு ஆலோ சனை வழங்க தனி கவுன்சலிங் மையம், ஹெல்ப் லைன் மற்றும் ஒரு உண்மை அறியும் குழுவை அரசு அமைக்க வேண்டும்” என்றார். இந்த நிகழ்ச்சியில் மனித உரிமை அமைப்பின் செயலாளர் சுரேஷ் மற்றும் 30-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x