Last Updated : 04 Sep, 2018 09:30 AM

 

Published : 04 Sep 2018 09:30 AM
Last Updated : 04 Sep 2018 09:30 AM

பெற்ற குழந்தைகளை கொலை செய்த இளம்பெண்; வாழ்வியல் பிரச்சினைகளை உளவியல் ரீதியாக எதிர்கொள்வது எப்படி?- பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்கள் கருத்து

பெண்கள் சந்திக்கும் உளவியல் ரீதியான பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்ளலாம் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சென்னையை அடுத்த குன்றத் தூரில் தனது 2 குழந்தைகளை பாலில் தூக்க மாத்திரை கொடுத்த இளம்பெண் ஒருவர் கொலை செய்தது பலரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இந்நிலை யில், கொலை செய்த பெண் மற்றும் அவரது ஆண் நண்பரை போலீஸார் நேற்றுமுன்தினம் கைது செய்தனர். இதுபோன்ற சம் பவங்கள் நடக்க என்ன காரணம், எப்படி பிரச்சினைகளை தவிர்க்க லாம் என்பது குறித்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:

சமூக ஆர்வலர் நிர்மலா தேசிகன்: நாம் முன்னேறிய சமூகத் தில் வாழ்வதாக கூறிக்கொள் கிறோம். ஆனால், நாளுக்கு நாள் உடல், மன ரீதியான பிரச்சினைகள் அதிகமாகிக்கொண்டேதான் வருகின்றன. கூட்டுக் குடும்ப முறை சிதைவும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்க காரணமாகின்றன. கூட்டுக் குடும்பமாக இருந்தால் மனம்விட்டு பேச பெரியவர்கள் இருப்பார்கள். யாரிடமும் பிரச்சினையை பகிர்ந்து கொள்ளாமல் ஏற்படும் மன அழுத்தமும் இதுபோன்ற கொலைச் சம்பவங்களுக்கு காரணமாகின்றன.

மனவள பயிற்சியாளர் கீர்த்தன்யா: இயந்திரத்தனமான தற்போதைய வாழ்க்கை முறையில் தூக்கமின்மை, அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவது போன்ற காரணங்களால் சிந்தித்து முடிவு எடுப்பதில் பலரும் தடு மாறுகின்றனர். பெண் பிள்ளை களை வளர்கும்போதே அவர்கள் உளவியல் ரீதியாக சந்திக்கும் பிரச்சினைகளையும் எதிர்கொள்ள கற்றுக்கொடுக்க வேண்டும். அதே போல, மன அழுத்தம் ஏற்படும் நேரங் களில் தனிமையில் இருப்பதை தவிர்த்து, நெருக்கமானவர்களிடம் பிரச்சினைகளை பகிர்ந்து கொண்டு, தீர்வு காண முயற்சிக்க வேண்டும். கொலை என்பது எந்த பிரச்சினைக்கும் தீர்வாகாது.

மனநல மருத்துவர் டாக்டர் என்.ஷாலினி: இளம்பெண்கள் தங்கள் கணவர் எப்போதும் அன்பு பாராட்ட வேண்டும் என்று விருப்பப் படுகின்றனர். அது கிடைக்காத போது தவறான உறவுகளை ஏற்படுத்தி கொள்கின்றனர். பெண் கள் தங்கள் உணர்வுகளை கட்டுப் படுத்த தெரிந்து கொள்ள வேண் டும். கணவர்களும் தங்கள் மனைவியை எப்படி கையாள வேண்டும் என்று தெரிந்துகொள்ள வேண்டும். ஒருவருக்கு ஒருவர் உண்மையான அன்பு பாராட்டும் போது இது போன்ற சம்பவங்கள் நடைபெறாது.

மூத்த வழக்கறிஞர் சுதா ராமலிங்கம்: அரிதினும் அரிதாக இதுபோன்ற கொலை சம்பவங் கள் நடைபெறுகின்றன. தற்போது பெரும்பாலானோர் உளவியல் ரீதியான பிரச்சினைகளை எதிர் கொள்ள முடியாமல் மாற்று வழியை தேர்ந்தெடுக்கின்றனர். கொலை செய்த பெண்ணுக்கும் உளவியல் ரீதியாக நிச்சயம் ஏதேனும் பிரச் சினை இருந்திருக்கும். எனவே, உளவியல் ரீதியாக பிரச்சினை களை எதிர்கொள்ள பெண்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஹேமா, குடும்பத்தலைவி, திருநின்றவூர்: இன்றைய தலை முறை பெண்கள் குடும்பத்துக்கான வரைமுறைகள் தெரியாமல், யாரும் யாருடனும் பழகலாம் என்று நினைக்கின்றனர். குடும்ப பந்தம் குறித்த நமது கலாச்சாரம் தெரியா மல் பெண்கள் வளர்க்கப்படுவதும் இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணமாக அமைகிறது. தன் குடும்பம், குழந்தை என்ற சிந்தனை இல்லாமல், எப்படியும் வாழலாம் என்ற எண்ணம் இன்றைய பெண் களிடம் கணிசமாக அதிகரித்துள் ளது. இந்த நிலை மாற வேண்டும்.

மருத்துவர் கே.எஸ்.ஜெய ராணி காமராஜ்: கணவரோடு கருத்து வேறுபாடு இருந்தால் சட்டப்படி கணவன், மனைவி பிரிந்து தங்களுக்கு விரும்பமான வேறொருவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆனால், குழந்தை களை கொலை செய்தது என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. குழந்தைகளை முறைப்படி ஒப் படைக்க அரசிடம் பல்வேறு நலத்திட்டங்கள் இருக்கின்றன. இதை அந்த பெண் பயன்படுத்தி இருக்கலாம்.

குடும்பத்தில் ஏற்படும் பிரச் சினையை கணவனும், மனைவி யுமே பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் அல்லது குடும்பத்தில் மூத்தவர்களிடம் மனம்விட்டு பேச வேண்டும். அதன்பிறகு, உளவியல் மருத்துவர்களிடம் ஆலோசனை பெறலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x