Published : 01 Sep 2018 11:56 PM
Last Updated : 01 Sep 2018 11:56 PM

தமிழகம், புதுவையில் கனமழை  வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

தமிழக பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பொழிவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. அதன் காரணமாக கடந்த இரு நாட்களாக தமிழகத்தில் சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

தற்போது தமிழக பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அதன் தாக்கத்தால் இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x