Published : 01 Sep 2014 10:00 AM
Last Updated : 01 Sep 2014 10:00 AM

எஸ்டேட் அதிபரை கட்டிப்போட்டு 23 பவுன் நகை, ரூ.15 லட்சம் கொள்ளை: ஏற்காட்டில் முகமூடி கும்பல் அட்டகாசம்

ஏற்காடு வெள்ளக்கடையில் எஸ்டேட் அதிபரை கத்தி முனை யில் கட்டிப்போட்டு 23 பவுன் நகை, ரூ.15 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

சேலம் ஏற்காடு வெள்ளக் கடையைச் சேர்ந்தவர் மகாதேவன் (78), எஸ்டேட் அதிபர். அவரது எஸ்டேட் நடுவில் உள்ள பங்களாவில் மனைவி மகாலட்சுமியுடன் (50) தனியாக வசித்து வருகிறார். வீட்டில் மலர் (22) என்ற பணிப்பெண்ணும் உள்ளார். சனிக்கிழமை கோவையில் உள்ள உறவினர் வீட்டுக்கு மகாலட்சுமி சென்றுள்ளார். அதனால் மகாதேவன் மற்றும் பணிப்பெண் மலர் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர்.

இந்நிலையில் இரவு 12 மணியளவில் வீட்டின் பின்புற கதவு தட்டப்பட்டுள்ளது. சத்தம் கேட்டு எழுந்த மலர் கதவை திறந்தபோது, முகமூடி அணிந்து அடையாளம் தெரியாத வகையில் நான்கு மர்மநபர்கள் நுழைந்துள்ளனர்.

அவர்களைக் கண்டு கூச்சல் எழுப்பிய பணிப்பெண்ணை, கொள்ளையர்கள் நான்கு பேரும் கத்திமுனையில் மிரட்டி சமையல் அறையில் கை, கால்களை கட்டி போட்டனர். மகாதேவன் அறைக்கு சென்ற கொள்ளையர்கள், அவரை கத்தி முனையில் மிரட்டி கை, கால்களை கட்டியுள்ளனர்.

வீட்டில் இருந்து பீரோ சாவியை எடுத்து அதில் இருந்து 23 பவுன் நகை, ரூ.15 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவற்றை திருடிக் கொண்டு தலைமறைவாகினர். சிறிது நேரத்துக்குப்பின், கயிற்றை அவிழ்த்த மகாதேவன், நடந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x