Published : 21 Sep 2018 09:20 AM
Last Updated : 21 Sep 2018 09:20 AM

புழல் சிறையில் எஸ்.பி. தலைமையில் திடீர் சோதனை டிவி, மின்சார ஸ்டவ், 2 மூட்டை பிரியாணி அரிசி பறிமுதல்: தீவிரவாதிகளுக்கு சலுகைகள் அளித்தது அம்பலம்

புழல் சிறையில் எஸ்.பி. தலைமை யில் நடத்தப்பட்ட சோதனையில் டிவி, எலெக்ட்ரிக் ஸ்டவ், 2 மூட்டை பிரியாணி அரிசி, வாசனை திரவியங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உயர் பாதுகாப்புப் பிரிவில் உள்ள தீவிரவாதிகளுக்கு சலுகைககள் அளிக்கப்பட்டிருப்பது அம்பலமாகியுள்ளது.

சென்னை புழல் சிறையில் கைதிகளிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு அவர்களுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுப்பதாக புகார்கள் எழுந்தன. கைதிகளின் புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அதைத் தொடர்ந்து புழல், கோவை, சேலம், கடலூர், பாளையங்கோட்டை மத்திய சிறைகளில் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். புழல் சிறை வார்டர்கள் 17 பேரை இடமாற் றம் செய்து சிறைத் துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா நடவடிக்கை எடுத்தார்.

இந்நிலையில், புழல் சிறையில் எஸ்.பி. ருக்மணி பிரியதர்சினி தலைமையில் சிறைக் காவலர்கள் 10 பேர் நேற்று முன்தினம் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். முதல் வகுப்பு கைதிகள் சிலருக்கு சொகுசு வசதிகள் செய்து தரப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் வெளி யான நிலையில், அந்தக் கைதி கள் வேறு சிறைகளுக்கு மாற்றப் பட்டனர். தற்போது முதல் வகுப்பு பிரிவில் இல்லாத, உயர் பாதுகாப்பு பிரிவில் இருக்கும் கைதிகளின் அறைகளில் மட்டும் சோதனை நடத்தப்பட்டது. இந்த பிரிவில் தீவிரவாதிகள் என கூறப்படும் சிலர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

முதல் வகுப்பு கைதிகள் அனுபவிக்கும் அனைத்து வசதி களையும் உயர் பாதுகாப்பில் இருக் கும் கைதிகளும் அனுபவிப்பதாக வந்த புகாரின்பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. இதில், கைதிகளின் அறைகளில் பல பொருட்கள் சிக்கின. 2 டிவிக்கள், 2 மூட்டை பிரியாணி அரிசி, வாசனை திரவி யங்கள், எலெக்ட்ரிக் ஸ்டவ் மற் றும் சமையல் பொருட்கள் பறி முதல் செய்யப்பட்டன.

சில வசதிகள் நீதிமன்ற உத்தரவின்பேரில் அளிக்கப் பட்டதாக சிறை நிர்வாகம் தெரிவிக் கிறது. புழல் சிறையில் 5 கைதிகள் மட்டுமே நீதிமன்றம் மூலம் சில வசதிகளை பெற்றுள்ளதாக கூறப் படுகிறது. ஆனால், காசு கொடுத்து பல கைதிகள் அனைத்து வசதிகளை யும் அனுபவித்து வருகின்றனர். இதுதொடர்பாக தொடர்ந்து வந்த புகார்களின்பேரிலேயே சிறைத் துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து சிறைத் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘புழல் சிறையில் உயர் பாதுகாப்பு பிரிவுகளில் தீவிரவாத இயக்கங்களை சேர்ந்த சிலர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான வசதி கள் எல்லாம் சிறைத் துறை அதிகாரிகளின் அனுமதியுடன்தான் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், கீழ்மட்ட அதிகாரிகளை இடமாற்றம் செய்துவிட்டு, லஞ் சம் வாங்கிய முக்கிய அதிகாரி களை விட்டு விடுகின்றனர். பீடி, சிகரெட், கஞ்சா போன்ற பொருட் களைத்தான் உறவினர்களும், சில சிறைக் காவலர்களும் மறைத்து கொண்டுவந்து கைதிகளுக்கு கொடுப்பார்கள். ஆனால், சமை யல் அடுப்பு முதல் பல பெரிய பொருட்கள் அனைத்தும் அதிகாரிகள் கூறியதன்பேரிலேயே கைதிகளுக்கு கொடுக்கப்பட்டது. புழல் சிறையில் மட்டுமின்றி மற்ற சிறைகளிலும் இதே நிலைதான்’’ என்றார்.

மற்றொரு அதிகாரி கூறும் போது, ‘‘புழல் சிறைக்குள் கண் காணிப்பு கேமராக்கள் வைக்கப் பட்டால் பல தவறுகள் வெளிச்சத் துக்கு வரும். அனைத்து மத் திய சிறைகளிலும் ஜாமர் கருவி கள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை அனைத்தும் உயர் பாதுகாப்பு பிரிவில் மட்டும்தான் வைக்கப்பட்டுள்ளன. அந்தக் கருவிகளும் சரியாக செயல்படுவ தில்லை. ஜாமர் கருவிகளின் சக்தி, குறைந்த தூரம் மட்டுமே செயல்படுவதால் மற்ற பிரிவுகளில் இருக்கும் கைதிகள் தாராளமாக செல்போனில் பேசுகின்றனர். சிறைக்கு உள்ளேயே ஒரு டெலிபோன் பூத் வைக்கப்பட்டு கைதிகள் பேசுவதற்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதியும் கொடுக்கப்படுகிறது. ஆனால், அதை பெரும்பாலானவர்கள் பயன் படுத்துவதில்லை. அதிகாரிகளும் அந்த டெலிபோன் பூத்தை பரா மரிப்பதில்லை’’ என்றார்.கைதிகளுக்குத் தேவையான வசதிகள் எல்லாம் அதிகாரிகளின் அனுமதியுடன்தான் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. கீழ்மட்ட அதிகாரிகளை இடமாற்றம் செய்துவிட்டு, முக்கிய அதிகாரிகளை விட்டு விடுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x