Published : 13 Sep 2018 07:58 AM
Last Updated : 13 Sep 2018 07:58 AM

மாரடைப்பு, மலட்டுத்தன்மை பாதிப்பை ஏற்படுத்தும் எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்கு தமிழகத்தில் தடை: சோதனை நடத்தி பறிமுதல் செய்ய சுகாதாரத்துறை உத்தரவு 

தமிழகத்தில் எலக்ட்ரானிக் சிக ரெட்டுகளுக்கான தடை அமலுக்கு வந்தது. தமிழகம் முழுவதும் சோதனை நடத்தி எலக்ட்ரானிக் சிகரெட்டுகளை பறிமுதல் செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஜூன் 14-ம் தேதி நடந்த சுகாதாரத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அத்துறையின் அமைச்சர், “எலக்ட்ரானிக் சிகரெட்டுகளை பிடிப்பதால் ஆபத்தில்லை என விளம்பரப்படுத்தி விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் மெல்லும் புகையிலை பொருட் களுக்கு தடை விதித்ததுபோல், மக்களின் உடல் நலன் கருதி எலக்ட்ரானிக் சிகரெட்டுகளும் (இ-சிகரெட்) தடை செய்யப்படும்” என்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து எலட்ரானிக் சிகரெட்டு களுக்கு சட்டப்படி தடை விதிப் பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர ஆலோசனை யில் ஈடுபட்டு வந்தனர். இதை யடுத்து தமிழகத்தில் எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்கு தடைவிதித்து தமிழக சுகாதாரத்துறை கடந்த 3-ம் தேதி அரசாணை வெளியிட்டது. அந்த அரசாணையின்படி கடந்த 11-ம் தேதி முதல் எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்கான தடை அமலுக்கு வந்துள்ளது. தமிழகம் முழுவதும் சோதனை நடத்தி எலக்ட்ரானிக் சிகரெட்டுகளை பறிமுதல் செய்யும்படி சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு உத்தர விடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பொது சுகாதா ரம் மற்றும் நோய் தடுப்பு மருத் துவத்துறை (டிபிஎச்) இயக்குநர் டாக்டர் க.குழந்தைசாமி கூறிய தாவது: எலக்ட்ரானிக் சிகரெட்டு களை இளைஞர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மாரடைப்பு, மலட்டுத் தன்மை, பக்கவாதம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் வருவதற்கு அதிகம் வாய்ப்புள்ளது. தமிழகத் தில் சீனாவில் தயாரிக்கப்படும் பல வகையான எலக்ட்ரானிக் சிகரெட் டுகள் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்திலும் எலக்ட்ரானிக் சிகரெட்டுகளை தயாரித்து விற் பனை செய்கின்றனர். தற்போது தமிழகத்தில் எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி தடையை மீறி விற்கப்படும் எலக்ட்ரானிக் சிகரெட்டுகளை பறிமுதல் செய்வார்கள்.

இவ்வாறு டாக்டர் க.குழந்தை சாமி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x