Published : 15 Sep 2018 08:01 AM
Last Updated : 15 Sep 2018 08:01 AM

தென் மாவட்ட ரயில்களில் முன்பதிவு தொடங்கியது: பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல மக்கள் ஆர்வம்

பொங்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய அடுத்த சில நிமிடங்களில் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் விரைவு ரயில்களில் டிக்கெட்கள் விற்று தீர்ந்தன. மேலும், ஜனவரி 13-ம் தேதிக்கான முன்பதிவு இன்றும் ஜனவரி 14-ம் தேதிகளுக்கான முன்பதிவு நாளையும் நடைபெறும்.

பெரும்பாலான மக்கள் இணையதளம் வழியாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ததால், டிக்கெட் முன்பதிவு மையங்களில் அதிகளவில் கூட்டம் இல்லாமல் இருந்தது. 2019 ஜனவரி 11 மற்றும் 12-ம் தேதிகளுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 5 முதல் 10 நிமிடங்களில் நெல்லை, பாண்டியன், கன்னியாகுமரி விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்தது.

காத்திருப்பு பட்டியல்

அதன்பிறகு, பொதிகை, அனந்தபுரி, திருச்செந்தூர், மன்னை விரைவு ரயில்களுக்கா‌ன டிக்கெட் முன்பதிவு முடித்து விட்டன. பெரும்பாலான விரைவு ரயில்களில் காத்திருப்பு பட்டியல் எண்ணிக்கை 50-ல் இருந்து 100 ஆக இருந்தது. பாண்டியன் விரைவு ரயிலில் அதிகபட்சமாக 494 ஆகவும், நெல்லை விரைவு ரயிலில் 269 ஆக காத்திருப்பு பட்டியல் நீண்டது.

ஜனவரி 13-ம் தேதிக்கான முன்பதிவு இன்றும் ஜனவரி 14-ம் தேதிகளுக்கான முன்பதிவு நாளையும் நடக்கும்.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘தற்போது, 76 சதவீதம் பேர் இணையதளம் வழியாக டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.

தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள் இயக்குவது பற்றிதான் முழு கவனம் செலுத்தி வருகிறோம். அடுத்த சில வாரங்களில் சிறப்பு ரயில்களுக்கான அறிவிப்பும் வெளியாகும். பொங்கலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்குவது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x