Published : 17 Sep 2018 09:06 AM
Last Updated : 17 Sep 2018 09:06 AM

விபத்து காப்பீடாக ரயில் பயணிகளிடம் 68 பைசா வசூல்: ஐஆர்சிடிசி அதிகாரிகள் தகவல்

ரயில் பயணிகளுக்கான இலவச காப்பீடு ரத்து செய்யப்பட்டு, ஒரு பயணிக்கு 68 பைசா வசூலிக் கப்பட்டு வருகிறது என்று ஐஆர்சிடிசி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக கேட்டபோது, ஐஆர்சிடிசி அதிகாரிகள் கூறியதா வது: ரயில் பயணிகளின் வசதிக் காக புதிய காப்பீடு திட்டம் 2016 செப்டம்பர் 1-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம், ரயிலில் பயணம் செய்யும் போது விபத்து ஏற்பட்டு பயணிகள் உயிரிழக்க நேர்ந்தால், அவர்களது குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப் பீடு வழங்கப்படும். உடல் உறுப்பு களை இழந்தால் ரூ.7.5 லட்சம் கிடைக்கும். காயம் ஏற்பட்டவர் களுக்கு மருத்துவச் செலவாக ரூ.2 லட்சம் வரை வழங்கப்படும்.

ஐஆர்சிடிசி 4 காப்பீடு நிறுவனங் களுடன் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்துகிறது. பயணிகள் மத்தியில் இது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இத்திட்டத்தில் பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே, இலவச காப்பீடு முறை ரத்து செய்யப்பட்டு, ஒரு பயணிக்கு 68 பைசா என வசூலிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த 1-ம் தேதி முதல் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x