

செங்கல்பட்டு, மதுராந்தகம் பகுதி கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இதுகுறித்து, செங்கல்பட்டு உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கூறியதாவது: “மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் உத்தரவின்பேரில், செங்கல்பட்டு பகுதி மற்றும் மதுராந்தகம் பகுதியில் உள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களான பான்மசால, குட்கா மற்றும் பான்பராக் ஆகிய பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என, கடைகளில் திடீர் சோதனை மேற்கொண் டோம்.
இதில், செங்கல்பட்டில் ரூ.4 ஆயிரம் மற்றும் மதுராந்தகத்தில் ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள பான்மசால, பான்பராக் ஆகியவற்றை பறிமுதல் செய்தோம்.
மேலும், கடைகளில் விற்பனை செய்யப்பட்ட காலாவதியான குளிர்பானங்களை பறிமுதல் செய்து அழித்தோம். இந்த சோதனையில் மதுராந்தகம் மற்றும் செங்கல்பட்டு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்” என்றார்.