

காஞ்சிபுரத்தில் ரூ.50 லட்சம் பணம் கேட்டு பல்பொருள் அங்காடி உரிமையாளர் ஒருவர் நேற்று முன் தினம் இரவு கடத்தப்பட்டார். போலீ ஸார் விரைந்து செயல்பட்டு அவரை மீட்டனர். இச்சம்பவத்தில் தப்பிய கடத்தல்காரர்களைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட் டுள்ளன.
ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பசூல் ரஹ்மான், செங்கல்பட்டு காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் பல்பொருள் அங்காடிகளை நடத்தி வருகிறார். இவரது வீடு ஓரிக்கை திருவேங்கடம் நகரில் உள்ளது.
இவர் நேற்று முன்தினம் இரவு காஞ்சிபுரத்தில் உள்ள கடையை மூடிவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப் போது ஆம்னி கார் ஒன்றில் வந்த மர்ம நபர்கள் காந்தி சாலை அருகே அவரை வழிமறித்து கடத்திச் சென்ற னர். பின்னர் அவரது மகன் ஜலாலு தீனிடம் கடத்தல் கும்பல் செல்போன் மூலம் "ரூ.50 லட்சம் பணம் கொடுத் தால் மட்டுமே தந்தையை விடுவிக்க முடியும். இல்லையேல் அவரைக் கொன்று விடுவோம்" என்று மிரட்டியது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானியிடம் ஜலாலுதீன் புகார் தெரிவித்தார்.
அடுத்தமுறை தொடர்பு கொண்ட கடத்தல்காரர்களிடம் ஜலாலுதீன் பேசும்போது, போலீஸார் அறிவுறுத் தல்படி, "பணம் தயாராகிவிட்டது. எங்கு வர வேண்டும், நான் மட்டும் வரட்டுமா, இப்போது நான் எனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருக் கிறேன்" என்று பேச்சு கொடுத்தார். இந்த நேரத்தில் கடத்தல்காரர்கள் பேசும் பகுதியின் செல்போன் டவர் கண்டறியப்பட்டு அதைச் சுற்றியுள்ள அனைத்து காவல் நிலை யங்களுக்கும் தகவல் தெரிவிக்கப் பட்டது. கடத்தல்காரர்கள் திருவண் ணாமலை மாவட்ட எல்லைக் குள் நுழைந்ததால் அப்பகுதி போலீஸாரும் உஷார்படுத்தப் பட்டனர்.
செய்யாறு அடுத்த பிரம்மதேசம் பகுதியில் போலீஸார் வாகன சோதனை செய்து கொண்டிருந்த தைக் கண்ட கடத்தல்காரர்கள், பசூல் ரஹ்மானை ஒரு வயல் வெளியில் இறக்கிவிட்டுவிட்டு அவர் கள் மட்டும் சோதனைச் சாவ டியை கடந்து சென்றனர். கடத்தல் காரர்கள் பற்றியோ, அவர்கள் வந்த வாகனம் குறித்தோ போலீஸாருக்கு தெரியாததால், அவர்களை பிடிக்க முடியவில்லை.
பின்னர் பசூல் ரஹ்மான் அப் பகுதியில் இருந்த ஒரு வீட்டின் கதவைத் தட்டி அங்கிருந்து செல் போன் மூலம் மகனுக்கும், காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து போலீஸார் பசூல் ரஹ்மானை மீட்டனர்.
கடத்தல்காரர்களைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள் ளன. இந்த விவகாரத்தில் துரிதமாக செயல்பட்ட போலீஸாருக்கு காஞ்சி புரம் மாவட்ட எஸ்பி சந்தோஷ் ஹதிமானி பாராட்டு தெரிவித்தார்.