Published : 24 Sep 2018 09:08 AM
Last Updated : 24 Sep 2018 09:08 AM

தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களில் 5 ஆயிரம் பணியாளர், உதவியாளர் பணியிடங்கள் காலி: குழந்தைகளின் கல்வி, சுகாதாரம் பாதிக்கும் அபாயம் 

தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களில் 5,000-க்கும் மேற் பட்ட அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணியிடங்கள் காலி யாக உள்ளதால் குழந்தைகளின் கல்வி, சுகாதாரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 54,439 அங்கன்வாடி மையங்கள் செயல் பட்டு வருகின்றன. இந்த மையங் களை அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் நிர்வகித்து வரு கின்றனர். அங்கன்வாடி பணியாளர் கள், உதவியாளர்கள் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு சத்துணவு, சுகாதாரம், முன்பருவ கல்வியை வழங்கி வருகின்றனர்.

விழிப்புணர்வு பணி

இதுமட்டுமின்றி, வளர் இளம் பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட் டும் தாய்மார்களுக்கு இணை உணவு வழங்குவதுடன், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

5,000 அங்கன்வாடி பணியாளர்கள்

ஆனால், அங்கன்வாடி மையங் களில் ஏற்பட்டுள்ள அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்ப நட வடிக்கை எடுக்காததால் இந்தப் பணிகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதன்படி, தமிழகம் முழுவதும் சிவகங்கை, திருவா ரூர், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 5,000-க் கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

5 மையங்கள் வரை...

காலிபணியிடங்கள் உள்ள மாவட்டங்களில், ஒரு அங்கன்வாடி பணியாளர், 5 மையங்கள் வரை நிர்வகிக்க வேண்டியுள்ளது. இத னால், அங்கன்வாடி மையங்களின் பலன்களை முழுமையாகப் பெற முடியாமல் குழந்தைகள், வளர் இளம் பெண்கள், பாலூட்டும் தாய் மார்கள் பரிதவித்து வருகின்றனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் பொது செயலாளர் டெய்சி கூறியதாவது:

தமிழகம் முழுவதும் சிவகங்கை, திண்டுக்கல், திருவாரூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் 5,000-க் கும் மேற்பட்ட அங்கன்வாடி பணி யாளர், உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

இதுதவிர, குறிப்பிட்ட கால இடைவேளியில் அங்கன்வாடி மையங்களில் பணியாற்றிய 2,000-க்கும் மேற்பட்டோர் ஓய்வு பெற்றுள்ளனர். ஆனால், இந்தப் பணியிடங்களும் அவ்வப்போது நிரப்பப்படவில்லை.

இதனால், ஒரு அங்கன்வாடி பணியாளர் 5 மையங்கள் வரை நிர் வகிக்க வேண்டியுள்ளது. அன்றாடப் பணிகளை மேற்கொள்ளக்கூட சிரம மாக உள்ளது. எனவே, காலி பணியிடங்கள் அனைத்தையும் உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட ஆட்சியர் பொறுப்பு

இதுகுறித்து , ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டியது அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் பொறுப்பு. எனவே, காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். அவர்களும் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் ஓய்வு பெற்றவர்களின் காலிப்பணி யிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

இருப்பினும், தற்போது பணியில் இருக்கும் பணியாளர்களைக் கொண்டு அங்கன்வாடி மையங் களைச் சிறப்பாகவே நிர்வகித்து வருகிறோம். எந்த பாதிப்பும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x