Published : 28 Sep 2014 11:18 AM
Last Updated : 28 Sep 2014 11:18 AM

மனிதன் சிந்தித்தால்தான் சமூகம் வளர்ச்சி பெறும்: திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான் பேச்சு

திருச்சி பெரியார் ஈவேரா கல்லூரியின் பொன்விழா ஆண்டு தொடக்க விழா, கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மற்றும் தந்தை பெரியாரின் 136-வது பிறந்த நாள் விழா என முப்பெரும் விழா கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவின் சிறப்பு விருந்தினரான தங்கர் பச்சான் பேசியதாவது: காமராஜர், பெரியார் பெரிய படிப்பு படிக்கவில்லை, ஆனால் மக்களைப் படித்திருந்தனர். ஆனால், இன்று படித்தவர்கள் என்று சொல்பவர்கள்தான் சமூகத்துக்கு எதுவுமே செய்யாமல் தன்னலத் துடன் உள்ளனர். நிலம், நீர், காற்று ஆகியவை இன்று மாசுபட்டுக் கிடக் கிறது. இதற்கு காரணம் படித்தவர்கள்தான்.

நம் நாட்டில் 50 சதவீத மக்களுக்கு கழிவறை இல்லை. மக்களின் அடிப் படை தேவைகளைப் பூர்த்தி செய் யாமல் நாம் வல்லரசு என்று பறைசாற்றிக் கொள்வதில் என்ன பெருமை இருக்க முடியும். விடு தலை பெற்று விட்டோம். ஆனால், மக்களிடம் ஏற்றத்தாழ்வு இல்லா மல் செய்தோமா, காசு இல்லாமல் கல்வி கொடுத்தோமா, மக்களுக்கு உணவளிக்கும் விவசாயியை மதித்தோமோ. எதுவுமே செய்ய வில்லையே. இதுதான் இன்றைய சமூகத்தின் அவலநிலை.

இன்றைய கல்வியை மதிப் பெண்கள்தான் நிர்ணயிக் கின்றன. நாட்டுப்பற்றை, தேசியப் பற்றை தற்போதைய கல்வி முறை போதிக்கிறதா? 1,300 ஆண்டுக ளுக்கு முன்னர் நாளந்தா பல் கலைக்கழகத்தில் வெளிநாட்டினர் அதிகம் பேர் படித்துள் ளனர் என்பது பெருமைதான். அந்த கல்வி முறை இப்போது உள்ளதா? இன்றைய கல்வி ஏட்டுச் சுரைக்காயாகவே உள்ளது. அன்று ஆசிரியர்கள் எதிர் கால சந்ததியை சிறந்ததாக உரு வாக்க வேண்டும் என்று தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர். இன் றைய ஆசிரியர்கள் ஏதோ சம்பளத்துக்காக பணியாற்றுகின் றனர். இந்த நிலை மாற வேண்டும்.

மக்கள் சிந்திக்க மறந்துவிட்டனர். சிந்திக்க மறுத்துவிட்டனர். மனிதர்க ளோடு பேசுவதையே தவிர்க்கி றோம். குழந்தைகள் இயந்திரங்க ளின் பின்னால் முடங்கிக் கிடக்கின்றனர். மனிதன் சிந்திக்க வேண்டும். அப்போதுதான் சமூகம் வளரும். இதை வலியுறுத்தும் வகை யில்தான் திரைப்படங்களை எடுக்க விரும்புகிறேன். நாம் படித்த படிப்பு இந்த சமுதாயம் மேன்மையடைய பயன்படவேண்டும்.

மாணவப் பருவத்தில் குழந்தை களுக்கு விதைக்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. அதை விடுத்து பாடப் புத்தகங்களில் அவர் களை மூழ்கடிக்கிறோம். இது தொடர்பான கதைகள் ஏராளம் என்னிடம் உள்ளன. இவற்றை திரைப்படமாக எடுக்க தயாரிப்பாளர் கள்தான் தயாராக இல்லை. இது வருத்தத்துக்குரியது. சமுதாய மாற்றத்துக்கான திரைப்படங்கள் அதிக அளவில் வர வேண்டும்.

ஒவ்வொரு கல்லூரியிலும் படித்த மாணவர்கள் 6 மாதங்களுக்கு ஒரு முறை குடும்பத்துடன் கூடுங் கள், சமுதாயத்துக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்பது பற்றி விவாதியுங்கள். அதுதான் மனிதனுக்குள் நட்பையும், மனித நேயத்தையும் வளர்க்கும் என்றார் தங்கர்பச்சான்.

விழாவுக்கு மாநிலங்களவை உறுப்பினரும், கல்லூரியின் முன் னாள் மாணவருமான திருச்சி என்.சிவா தலைமை வகித்துப் பேசிய போது, “முன்னாள் மாணவர்கள் பெரும்பாலானோர் இந்த விழா வுக்கு வரவில்லை. நம்மை உயர்த் திய கல்லூரிக்காக ஒரு நாள் செலவிடக் கூடாதா. படித்த வகுப்பறைகள், சுற்றித் திரிந்த பகுதிகள், மரத்தடிகள் ஆகிய வற்றை அசைபோடும் போது கிடைக்கும் மகிழ்ச்சி கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காது” என்றார்.

விழாவில் கல்லூரியின் முன் னாள் முதல்வர்கள் செல்லப்பா, அன்பானந்தம், முஸ்தபா கமால், திருமாவளவன், திருமாறன் மற்றும் பேராசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x