Published : 21 Sep 2018 08:30 AM
Last Updated : 21 Sep 2018 08:30 AM

புதிய தலைமை செயலகம் கட்டியதில் முறைகேடு; விசாரணை ஆணையத்துக்கு புதிய தலைவர் நியமனமா?- அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடு நடந்திருப் பதாகக் கூறி, அதுகுறித்து விசாரிக்க உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.ரகுபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷனை 2011-ம் ஆண்டு தமிழக அரசு அமைத்தது.

இந்த ஆணையம் முன்பு, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண் டும் என்று ஆணையம் சம்மன் அனுப்பியது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் இந்த வழக்கை விசாரித்தபோது, “விசாரணை ஆணையம் என்பதே கண் துடைப்பு நாடகம். அதனால் என்ன பயன் ஏற்பட்டுள்ளது?” என்று கண்டனம் தெரிவித்ததுடன், விசாரணை ஆணையத்தை மூடிடவும் உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து புதிய தலை மைச் செயலக முறைகேடு தொடர் பாக விசாரித்து வந்த ஆணையத் தலைவர் நீதிபதி ஆர்.ரகுபதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் இவ்வழக்கு நீதி பதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக் கறிஞரிடம் நீதிபதி பல கேள்விகள் கேட்டார்.

பின்னர், “மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரம் குறித்து விசாரிக் கும் நீதிபதி எஸ். ராஜேஸ்வரன் தலைமையிலான விசாரணை ஆணையத்துக்கு 3 மாதங்களுக்கு மேல் பதவி நீட்டிப்பு வழங்கக் கூடாது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூடு பற்றி விசாரித்து வரும் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் தனது விசாரணையை முடிக்க கால அவகாசம் நிர்ண யிக்க வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், “நீதிபதி ஆர்.ரகுபதி தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டதால், அந்த விசாரணை ஆணையத் தலைவர் பதவிக்கு வேறு நீதிபதியை அரசு நியமிக்க உள்ளதா?” என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, “அதுகுறித்து வரும் 27-ம் தேதி தெரிவிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x