கோவை எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றியமைப்பு

கோவை எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றியமைப்பு
Updated on
2 min read

தெற்கு ரயில்வேயின் கால அட்டவணை வெளியிடப்பட்டது. இதன்படி கோவை எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரம் செப். 1 முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட் டுள்ள கால அட்டவணப்படி கோவை – சென்னை சென்ட்ரல், கோவை எக்ஸ்பிரஸ் ரயிலின் (எண்: 12676) நேரம், செப்டம்பர் 1-ம் தேதியில் இருந்து மாற்றிய மைக்கப்படுகிறது. அதன்படி, இந்த ரயில், கோவையில் இருந்து பகல் 2.20 மணிக்குப் பதிலாக, பகல் 2.55 மணிக்குப் புறப்படும். சென்னை சென்ட்ரலுக்கு இரவு 9.45 மணிக்குப் பதிலாக, இரவு 10.25 மணிக்கு வந்துசேரும்.

சென்னையில் வியாழக் கிழமை வெளியிடப்பட்ட தெற்கு ரயில்வே கால அட்டவணையில் மேலும் தெரிவித்திருப்பதாவது:

அகமதாபாத் – சென்னை சென்ட்ரல் வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரயில், வசாய் ரோடு, புனே, குண்டக்கல் வழியாக இயக்கப்படும். லோக்மான்ய திலக் – சென்னை சென்ட்ரல் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில், புனே, வாடி, குண்டக்கல் வழியாக இயக்கப்படும்.

பெங்களூர்–சென்ட்ரல் தினசரி

பெங்களூர் சிட்டி – சென்னை சென்ட்ரல் தினசரி எக்ஸ்பிரஸ் ரயில், பங்காருப்பேட்டை, ஜோலார்பேட்டை வழியாக இயக்கப்படும். விசாகப்பட்டினம் – சென்னை சென்ட்ரல் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில், விஜயவாடா வழியாக இயக்கப்படும். மன்னார்குடி – ஜோத்பூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை எழும்பூர், விஜயவாடா, போபால், ஜெய்ப்பூர் வழியாக இயக்கப்படும்.

திருவனந்தபுரம் – ஹஸ்ரத் நிஜாமுதீன் வாரந்திர எக்ஸ்பிரஸ் ரயில் கோட்டயம், கே.ஆர்.சி.எல்., கோட்டா வழியாகச் செல்லும். திருவனந்தபுரம் – ஹஸ்ரத் நிஜாமுதீன் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில், ஆலப்புழை, கே.ஆர்.சி.எல்., கோட்டா வழியாக இயக்கப்படும்.

பெங்களூர் சிட்டி – மங்களூர் எக்ஸ்பிரஸ்

பெங்களூர் சிட்டி – மங்களூர் சென்ட்ரல் தினசரி எக்ஸ்பிரஸ் ரயில், மைசூர், சக்லேஸ்பூர் வழியாக இயக்கப்படும். அவுரா – யஸ்வந்த்பூர் ஏசி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில், புவனேஸ்வர், ரேணிகுண்டா, காட்பாடி வழியாக இயக்கப்படும். மேற்கண்ட 9 எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். நாகர்கோவில் – கச்சிகுடா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில், மதுரை, நாமக்கல், காட்பாடி, திருப்பதி வழியாக கடந்த மே 20-ம் தேதியில் இருந்து இயக்கப்படுகிறது.

பயணிகள் ரயில்

புனலூர் – கன்னியாகுமரி தினசரி பயணிகள் ரயில், திருச்செந்தூர் – திருநெல்வேலி தினசரி பயணிகள் ரயில், காசர்கோடு – மூகாம்பிகை சாலை பைந்தூர் தினசரி பயணிகள் ரயில் ஆகியவை இயக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். மன்னார்குடி – மயிலாடுதுறை தினசரி பயணிகள் ரயில், கடந்த மே 13-ம் தேதியில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

பெங்களூர் – கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலின் (எண்: 16526) நேரம் மாற்றியமைக்கப்படுகிறது. அதன்படி, பெங்களூரில் இருந்து இரவு 9.40 மணிக்குப் பதிலாக இரவு 10 மணிக்கு புறப்படும். கன்னியாகுமரிக்கு மாலை 6.05 மணிக்குப் பதிலாக பகல் 3.15 மணிக்கே வந்துசேரும். இந்த நேரம் மாற்றம் எப்போது என்பது பின்னர் அறிவிக்கப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in