Published : 18 Sep 2018 09:57 AM
Last Updated : 18 Sep 2018 09:57 AM

உள்ளாட்சி தேர்தல்: அமைச்சர் விளக்கம்

வார்டுகள் வரையறை பணிகள் நடப்பதால், உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

பெரியாரின் பிறந்தநாளையொட்டி நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள விருந்தினர் மாளிகையில், அவரது உருவப் படத்துக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, நீலகிரி எம்.பி. சி.கோபாலகிருஷ்ணன், மாநிலங்களவை உறுப்பினர்கள் கே.ஆர்.அர்ஜுனன், ஏ.கே.செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறும்போது, 'உள்ளாட்சித் தேர்தல் நடத்த, திமுக தொடர்ந்த வழக்கு தடையாக இருந்தது. மேலும், தற்போது தமிழகம் முழுவதும் வார்டுகள் வரையறை பணிகள் நடந்து வருவதால், உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. வார்டுகள் வரையறை பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இப்பணி முடிந்ததும், தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஆயத்தமாகும்' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x