Published : 10 Jun 2019 10:29 AM
Last Updated : 10 Jun 2019 10:29 AM

திருப்பரங்குன்றத்தில் ராஜன் செல்லப்பா ஆலோசனைக் கூட்டம்: காரணம் உள்ளாட்சித் தேர்தலா? உள்கட்சி விவகாரமா?

மதுரை வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., திருப்பரங்குன்றத்தில் தற்போது அவசர ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்தக் கூட்டம் உள்ளாட்சித் தேர்தல் பற்றிய ஆலோசனைக்காகவா? இல்லை உள்கட்சி புகைச்சல் குறித்த விவாதத்துக்காகவா? என்ற சலசலப்பு எழுந்துள்ளது.

முன்னதாக கடந்த சனிக்கிழமையன்று ராஜன் செல்லப்பா செய்தியாளர்களைக் கூட்டி "அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமையே வேண்டும்" என்று வலியுறுத்தினார். இதனால் அதிமுகவுக்குள் மீண்டும் பிளவா? என்று பேச்சை உருவாக்கியது.

இதற்கிடையில் ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ் சத்யன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தா. அந்த சந்திப்பின்போது தந்தையின் பேச்சைப் பற்றி விளக்கிக்கூறினாரா? இல்லை தந்தை பேச்சுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை கைவிரித்துவிட்டு வந்தாரா என்பதும் வெளிவராத தகவலாக இருக்கிறது.

இந்நிலையில், மதுரை வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., திருப்பரங்குன்றத்தில் இன்று (திங்கள்கிழமை) காலை அவசர ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டுள்ளார். திருப்பரங்குன்றம் ஜெஜெ மஹாலில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில்

கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து ஒன்றியச் செயலாளார்கள் கலந்து கொள்கின்றனர். இது உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் என்று ராஜன் செல்லப்பாவுக்கு நெருக்கமான வட்டாரம் கூறுகிறது.

உள்ளாட்சித் தேர்தலை எப்படி சந்திப்பது? எப்படி வெற்றி பெறலாம்? போன்றவை குறித்து ஆலோசிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

அதிமுகவில் இரட்டை தலைமைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் அமைச்சர்கள் கூட்டம் வரும் 12-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகை சூழலில் ராஜன் செல்லப்பா ஒன்றியச் செயலாளர்களுடன் ஆலோசனக் கூட்டம் நடத்துவதால் அது அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x