போர்வெல் குற்றங்களுக்கு கடும் தண்டனை: உயர் நீதிமன்றத்தில் அரசு உறுதி

Updated on
2 min read

ஆழ்துளைக் கிணறு தோண்டுவது மற்றும் பராமரிப்பில் அலட்சியமாக இருந்து உயிர் பலி நிகழ காரணமாக இருப்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும். இதுதொடர்பான விதிமுறைகள் ஒரு மாதத்துக்குள் அறிவிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி ஜி.சிவகாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருந்ததாவது:

ஆழ்துளைக் கிணறுகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. தமிழகத்தில் இது செயல்படுத்தப்படுவதில்லை. இதன் காரணமாக ஆழ்துளைக் கிணறுகளில் விழுந்து சிறுவர்கள் பலர் உயிரிழக்கின்றனர்.

எனவே, ஆழ்துளைக் கிணறுகளை தோண்டுவது, தோண்டிய கிணறுகளை பராமரிப்பது உள்ளிட்டவை தொடர்பாக உரிய விதி முறைகளை உருவாக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் சிவகாமி கோரியிருந்தார்.

இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் சமீபத்தில் பிறப்பித்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது:

ஆழ்துளைக் கிணறு தோண்டுவது மற்றும் பராமரிப்பில் அலட்சியமாக இருந்து உயிர் பலி நிகழ காரணமாக இருப்பவர்களுக்கு கடும் தண்டனை அளிக்கும் விதத்தில் தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம், சென்னை பெருநகர பகுதி நிலத்தடி நீர் சட்டம் போன்ற வற்றில் போதிய திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

விதிமுறைகளை உருவாக்கும் பணி நடந்து வருகிறது என்று அரசுத் தரப்பில் கூறியுள்ளனர். இன்னும் ஒரு மாத காலத்துக்குள் இந்த விதிமுறைகள் அறிவிக்கை செய்யப்படும். இதுதொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விரிவாக பிரச்சாரம் செய்யப்படும் என்றும் அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த வழக்கில் இதற்கு மேல் எந்த உத்தரவும் தேவையில்லை என்பதால் வழக்கு முடித்துவைக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர். ஆழ்துளைக் கிணறு தோண்டுவது மற்றும் பராமரிப்பில் அலட்சியமாக இருந்து உயிர் பலி நிகழ காரணமாக இருப்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும். இதுதொடர்பான விதிமுறைகள் ஒரு மாதத்துக்குள் அறிவிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி ஜி.சிவகாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருந்ததாவது:

ஆழ்துளைக் கிணறுகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. தமிழகத்தில் இது செயல்படுத்தப்படுவதில்லை. இதன் காரணமாக ஆழ்துளைக் கிணறுகளில் விழுந்து சிறுவர்கள் பலர் உயிரிழக்கின்றனர்.

எனவே, ஆழ்துளைக் கிணறுகளை தோண்டுவது, தோண்டிய கிணறுகளை பராமரிப்பது உள்ளிட்டவை தொடர்பாக உரிய விதி முறைகளை உருவாக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் சிவகாமி கோரியிருந்தார்.

இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் சமீபத்தில் பிறப்பித்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது:

ஆழ்துளைக் கிணறு தோண்டுவது மற்றும் பராமரிப்பில் அலட்சியமாக இருந்து உயிர் பலி நிகழ காரணமாக இருப்பவர்களுக்கு கடும் தண்டனை அளிக்கும் விதத்தில் தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம், சென்னை பெருநகர பகுதி நிலத்தடி நீர் சட்டம் போன்ற வற்றில் போதிய திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

விதிமுறைகளை உருவாக்கும் பணி நடந்து வருகிறது என்று அரசுத் தரப்பில் கூறியுள்ளனர். இன்னும் ஒரு மாத காலத்துக்குள் இந்த விதிமுறைகள் அறிவிக்கை செய்யப்படும். இதுதொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விரிவாக பிரச்சாரம் செய்யப்படும் என்றும் அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த வழக்கில் இதற்கு மேல் எந்த உத்தரவும் தேவையில்லை என்பதால் வழக்கு முடித்துவைக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in