Published : 11 Jun 2019 12:00 AM
Last Updated : 11 Jun 2019 12:00 AM

ராமேசுவரம் அருகே ஆழ்கடலில் விடப்பட்ட விஷ மீன்

ராமேசுவரம் அருகே தனுஷ் கோடியில் நேற்று கரை வலை இழுக்கும்போது விஷத் தன்மையுள்ள மீன் பிடிப்பட்டது. 20 செ.மீ. நீளம், 250 கிராம் எடை, 15 செ.மீ உயரம் உடையதாக இருந்தது.

இந்த மீனைப் பற்றி மரைக்காயர் பட்டினம் ஆராய்ச்சியாளர் கூறியதாவது:

இது டெரோயிஸ் மீன் (Pterois fish) ஆகும். இவற்றில் 12 இனங்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. அதிகபட்சம் ஒரு அடி நீளம் வளரும். இதில் சிவப்பு, வெள்ளை, பழுப்பு, கிரீம், கருப்பு வர்ணங்களில் உணர் இழைகள் இருக்கும். இந்த மீன் அதிகப்பட்சம் 15 ஆண்டுகள் வரை வாழும்.

இந்த விஷ மீனின் உடலில் நச்சு முட்கள் இருக்கும். சுறா, அஞ்சாளை, களவாய், கிளாத்தி மீன்கள் இந்த விஷ மீன்களை இரையாக்கிக் கொள்ளும். இதன் நஞ்சு, இந்த மீன்களை ஒன்றும் செய்வதில்லை. ஆனால் இந்த விஷ மீனின் முட்கள் மனிதனை குத்தினால் கடும் வலி ஏற்பட்டு, சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளும். உடனே சிகிச்சை மேற்கொள்ளப்படாவிட்டால் மரணம் ஏற்படலாம்.

கடல் பார்களில் வசிக்கும் இவை வலையில் அரிதாகவே சிக்கும். இவை சிக்கினால் அதிர்ஷ்டம் என நம்பும் மீனவர்கள், அதனை திரும்பவும் கடலிலேயே விட்டு விடுவர் எனத் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x