Published : 18 Sep 2014 11:05 AM
Last Updated : 18 Sep 2014 11:05 AM

விக்கிபீடியாவில் பல்கலைக்கழக பாடங்கள்: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் திட்டம்

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைகழகத்தின் பாடங்கள் விரைவில் தமிழ் விக்கிபீடியாவில் வெளியாகவுள்ளன. இதற்கான முதல் கட்ட பயிலரங்கு சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த பயிலரங்கில் பச்சையப்பன் கல்லூரி, விவேகானந்தர் கல்லூரி, அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களின் முனைவர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைகழகத்தின் துணை வேந்தர் முனைவர் சந்திரகாந்தா ஜெயபாலன் இந்த பயிலரங்கில் பேசும்போது, “பல்கலைக் கழகத்தின் 13 துறைகளில் உள்ள பாடங்களையும் தமிழ் விக்கி பீடியாவில் பதிவேற்றம் செய்ய முனைவர்களுக்கு பயிற்சி அளிக்க வுள்ளோம்.

தமிழ் விக்கிபீடியாவில் பாடங்களைப் பதிவேற்றுவது மட்டுமின்றி அத்துடன் சம்மந்தப்பட்ட மற்ற தகவல் களையும், அதற்கான படங்கள், வீடியோக்களையும் பதிவேற்றம் செய்ய முடியும். இதனை மாணவர்கள் மட்டுமல்லாமல் பிறரும் அறிந்து கொள்ள முடியும்” என்றார்.

பயிலரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கனடாவின் வாட்டர்லூ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் செ.இரா.செல்வ குமார், “விக்கிப்பீடியா என்பது கலைகளஞ்சியம் அல்ல. தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கான தொழில்நுட்பம். அதை இன்னும் முழுமையாக பயன்படுத்த வேண்டியுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x