Published : 12 Jun 2019 09:18 AM
Last Updated : 12 Jun 2019 09:18 AM

ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சை பேச்சு; இயக்குநர் ரஞ்சித் மீது 2 பிரிவில் வழக்கு

மாமன்னன் ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சை ஏற்படும் விதமாக கருத்து தெரிவித்த திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் மீது 2 பிரிவுகளின் கீழ் திருப்பனந்தாள் போலீஸார் வழக்கு பதிவு செய் துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணத்தை அடுத்த திருப்பனந் தாளில் நீலப்புலிகள் இயக்க நிறுவன தலைவர் உமர்பாரூக்கின் நினைவு நாள் பொதுக்கூட்டம் கடந்த 5-ம் தேதி இரவு நடைபெற்றது. இதில், திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கலந்துகொண்டு பேசி யது சமூக வலைதளங்களில் வைர லாகி வருகிறது.

பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

டெல்டா பகுதியில் சாதிய கொடுமைகள் அதிகமாக நிகழ்ந் துள்ளன. ராஜராஜ சோழன் காலம்தான் பொற்காலம் என்பார் கள். ஆனால், ராஜராஜ சோழன் ஆண்ட காலம்தான் இருண்ட காலம் என இந்த மண்ணிலிருந்து சொல்கிறேன். ராஜராஜ சோழன் என்னுடயை சாதியாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

மிகப்பெரிய சூழ்ச்சியின் அடிப்படையில் எங்களது நிலம் பறிக்கப்பட்டது அவரது ஆட்சிக் காலத்தில்தான். சாதி ரீதியாக மிகப்பெரிய ஒடுக்குமுறை ஆரம்பிக்கப்பட்டது அவருடைய ஆட்சிக்காலத்தில்தான். 400 பெண்களை விலைமாதர்களாக மாற்றியது அவரது ஆட்சிக்காலத் தில்தான் என்றார்.

இந்நிலையில், திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் பாலா, திருவிடைமருதூர் காவல் துணை கண்காணிப்பாளரிடம் நேற்று முன்தினம் மனு ஒன்றை அளித்தார்.

அதில், இயக்குநர் ரஞ்சித்தின் பேச்சு, ராஜராஜ சோழனை இழிவுபடுத்தும் வகையிலும், இந்தியாவில் அனைத்து சமுதாயத் தினரும் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நிலையில், இந்திய இறை யாண்மைக்கு எதிராகவும், சாதிப் பிரிவினையை ஏற்படுத்தும் விதத்திலும் உள்ளது.

மேலும், இளைஞர்களின் மனதில் தீய எண்ணத்தை விதைக் கும் வகையில் அவரது பேச்சு திட்டமிட்ட வன்மத்தோடு உள்ள தால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவரை கைது செய்ய வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். மனுவைப் பெற்றுக்கொண்ட திருப்பனந்தாள் போலீஸார், கலகம் உண்டாக்குதல் மற்றும் சாதிமத மோதல் உருவாக்குதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவுசெய்துள்ளனர்.

முக்குலத்துப் புலிகள்

இதேபோல, ‘தமிழர்களின் பெருமைக்குரிய அடையாளமாக விளங்கும் மாமன்னன் ராஜராஜ சோழன் மீது எந்த ஒரு ஆதார மும் இல்லாமல் பொய்யான குற்றச்சாட்டை இயக்குநர் ரஞ்சித் சுமத்துகிறார். சாதி மோதல்களை தூண்டும் விதமாக, பொது அமைதியை சீர்குலைக்கும் வகை யில் திட்டமிட்டு தொடர்ச்சியாகப் பேசிவரும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தமிழ்நாடு முக்குலத்துப் புலிகள் அமைப்பின் தலைவர் ஆறு.சரவணன், நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமாரிடம் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x