Last Updated : 27 Jun, 2019 12:00 AM

 

Published : 27 Jun 2019 12:00 AM
Last Updated : 27 Jun 2019 12:00 AM

சைபர் பாதுகாப்பு ஆய்வில் வழிகாட்டும் ‘செட்ஸ்’

இணைய பயன்பாடு பரவலாகி, சைபர் தாக்குதலும் அதிகரித்திருக்கும் நிலையில், சைபர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது. இணைய தாக்குதலுக்கான அபாயங்கள் பற்றி அறிந்து கொள்ளும்போது, இணைய பாதுகாப்பின் அவசியத்தையும் உணர்ந்து கொள்ள முடிகிறது. சாமானியர் கள் கொஞ்சம் தாமதமாக இந்த விஷ யங்களை உள்வாங்கிக் கொண்டாலும், ஒரு தேசமாக, இந்தியா சைபர் பாதுகாப்பில் தயார் நிலையில் இருக்கும் வகையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இதற்கு உதாரணம் ‘செட்ஸ்.’

மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்புக்கான கழகம் என்பதன் சுருக் கமே செட்ஸ் (SETS). மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் கீழ் இயங்கும் செட்ஸ், சைபர் பாதுகாப்பு தொடர்பான ஆய்வு மற்றும் தீர்வுகளை வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இணைய உலகின் நிகழ்கால சவால்களை எதிர்கொள்வதோடு, எதிர்கால நோக்கிலும் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.

இளம் விஞ்ஞானிகள்

சைபர் பாதுகாப்பு தொடர்பான ஆய்வில் முன்னோடியாக விளங்கும் செட்ஸ் தற்போது குவாண்டம் கம்ப்யூட்டிங், கிரிஃப்டாலஜி, பிளாக்செயின் உள்ளிட்ட பிரிவுகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. இளம் விஞ்ஞானிகள் ஆர்வத்துடன் செயல்படும் துடிப்பான ஆய்வு அமைப்பாக விளங்கும் செட்ஸ் உருவான விதம் குறித்தும், நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்தும் அதன் நிறுவன தின விழாவில் அறிந்து கொள்ள முடிந்தது.

சென்னை தரமணியில், கணித மையம் மற்றும் ஐஐடி ஆகிய உயர்கல்வி அமைப்புகளுக்கு இடையே அமைதியான சூழலில் ‘செட்ஸ்’ அமைந்துள்ளது. அண்மையில் (ஜூன் 25) செட்ஸ் வளா கத்தில் அதன் 18-வது நிறுவன விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், செட்ஸ் செயல் இயக்குநர் சர்த் சந்திர பாபு, செட்ஸ் தலைவர் மற்றும் முதன்மை அறி வியல் ஆலோசகர் விஜயராகவன், சென்னை ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி, பார்க், ஹோமி பாபா தலைவர் ஆர்.சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்தியா தயாரா?

அணு விஞ்ஞானியும், முன்னாள் குடியரசு தலைவருமான அப்துல் கலாமின் தொலைநோக்கு பார்வை மற்றும் கனவின் பயனாக உருவாகிய அமைப்பாக ‘செட்ஸ்’ விளங்குகிறது. 1990-களின் பின்பகுதியில் இணையப் பயன்பாடு பிரபலமாகத் தொடங்கி, வங்கிச்சேவை உள்ளிட்ட துறை களில் கம்ப்யூட்டர் பயன்பாடு முக்கியத் துவம் பெறத் தொடங்கியது. மின்னணு பரிவர்த்தனை வசதிகளும் அறிமுகமாயின. வங்கிச்சேவைகள், வேகமாக கம்ப்யூட்டர் மயமாகி வந்த நிலையில், சைபர் தாக்குதலுக்கு இந்தியா தயாராக இருக்கிறதா? எனும் கேள்வியை மையமாக கொண்டு பலரும் எதிர்மறையான கருத்துகளை கூறி வந்தனர்.

இந்தப் பின்னணியில், இணையப் பாதுகாப்பில் இந்தியா தயார் நிலையில் இருப்பதை உணர்த்தவும், இத்துறையில் எதிர்கால நோக்கிலான ஆய்வில் ஈடுபடு வதை உறுதி செய்யவும், ஒரு அமைப்பு தேவை என்பதை அப்போது டி.ஆர்.டி.ஓ அமைப்பில் விஞ்ஞானியாக இருந்த அப்துல் கலாம் விரும்பினார். இதன் பயனாக நடைபெற்ற விவாதம் மற்றும் ஆலோசனைகளின் பலனாக, 2002-ல் சைபர் பாதுகாப்புக்கான ஆய்வு அமைப்பாக, ‘செட்ஸ்’ நிறுவப்பட்டது. இந்த தகவலை, நிகழ்ச்சியில் பேசிய, ‘செட்ஸ்’ அமைப்பின் நிர்வாக கவுன்சில் தலைவரான என்.சீதாராம் பகிர்ந்துகொண்டார்.

சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு

தற்போது பாபா அணு சக்தி மைய தலைவராக இருக்கும் விஞ்ஞானி ஆர்.சிதம்பரம், ‘செட்ஸ்’ அமைப்பின் முதல் தலைவராக இருந்து வழிகாட்டினார். இந்த அமைப்பை நிறுவும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் போட்டியிட்ட நிலை யில் தமிழக அரசு சென்னை தரமணியில் இடமளிக்க, ‘செட்ஸ்’ அமைப்பு இங்கு நிறுவப்பட்டது குறித்த தகவலை ஆர்.சிதம்பரம் பகிர்ந்து கொண்டார். இந்த அமைப்பில் தமிழக அரசும் ஒரு உறுப் பினராக இணைந்ததை குறிப்பிட்டவர், ‘செட்ஸ்’ வளர்ச்சி பாதை குறித்த தக வல்களை பகிர்ந்து கொண்டார். தேசிய பாதுகாப்பில் சைபர் பாதுகாப்பின் முக்கியத் துவம் தொடர்பான விழிப்புணர்வு அதி கரித்து வரும் சூழலில், ‘செட்ஸ்’ அமைப் பின் வளர்ச்சி அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

முதன்மை அறிவியல் ஆலோசகரும், ‘செட்ஸ்’ தலைவருமான பேராசிரியர்.கே.விஜயராகவன் பேசும்போது, சைபர் பாதுகாப்பு ஆய்வில் ‘செட்ஸ்’ அமைப்புக்கு ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாகவும், கணித அமைப்பு, ஐஐடி ஆகிய உயர் கல்வி நிறுவனங்கள் உள்ள சூழலில் ‘செட்ஸ்’ அமைந்துள்ளது மிகவும் பொருத்தமானது என்றும், இதை ‘செட்ஸ்’ சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார். ‘செட்ஸ்’ கவனம் செலுத்த வேண்டிய பிரச்சினைகள் குறித்தும் விரிவாக பேசியவர், தரவுகளை சேகரிக்கும்போது, அதை கையாளும் துறைசார்ந்த புரிதலும் முக்கியம் என்றார். 5ஜி நுட்பம் அறிமுகம் ஆகும்போது, சைபர் பாதுகாப்பில் சவாலான விஷயங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

ஸ்டார்ட் அப் தேவை

சென்னை ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி பேசும்போது, ஸ்டார்ட் அப்களை ஊக்குவிக்கும் சூழலை உருவாக்க வேண்டும் என்றும், சைபர் பாதுகாப்பு துறையில் ஸ்டார்ட் அப்கள் தேவை என்றும் குறிப்பிட்டார். ‘செட்ஸ்’ மற்றும் ஐஐடி இணைந்து, இதில் ஊக்கம் அளிக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். பெங்களூரு அறிவியல் கழக பேராசிரியர் வேணி மாதவன், குவாண்டம் கம்ப்யூட்டரை உருவாக்குவதில் உள்ள சவால்கள் பற்றி பேசினார். ‘செட்ஸ்’ நிர்வாக அதிகாரி எஸ்.கே.ஐயர் நன்றி கூறினார்.

செயல் இயக்குநர் சரத் சந்திர பாபு, ‘செட்ஸ்’ அமைப்பின் செயல்பாடுகள் மற்றும் உருவாக்கியுள்ள சைபர் பாதுகாப்பு தீர்வுகள் குறித்து நம்மிடம் விளக்கி கூறினார். சைபர் பாதுகாப்பு தொடர்பான நீண்டகால நோக்கிலான ஆய்வை நோக்கமாக கொண்டுள்ள ‘செட்ஸ்’, அடிப்படையான ஆய்வு, அந்த ஆய்வு அடிப்படையிலான முன்னோட்ட சேவைகள், தீர்வுகளை உருவாக்குவது மற்றும் தொடர்புடைய பிற அமைப்புகள், கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது ஆகிய மூன்று செயல்பாடுகளில் செட்ஸ் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஹார்ட்வேர் பாதுகாப்பு, கிரிஃப்டாலஜி, பிளாக்செயின் உள்ளிட்ட துறைகளில் ஆய்வு நடைபெற்று வருவதாக குறிப்பிட் டவர், சைபர் பாதுகாப்புக்கென ‘ட்ரூ ரேண்டம் நம்பர் ஜெனரேட்டர்’, ‘இன்டக் ரேட்டட் திரெட் மேனேஜ்மென்ட் அப்லை யன்ஸ்’ உள்ளிட்ட தீர்வுகளை குறித்து விளக்கினார். சைபர் பாதுகாப்பு துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு, ஸ்கேன்ஸ் எனப்படும் அட்வான்ஸ் நெட்வொர்க் செக் யூரிட்டி தொடர்பான ஆறு வார கால சான் றிதழ் பாட திட்டத்தை அறிமுகம் செய்துள்ள தாகவும், பிரான்சைஸ் முறையில் இதை மேலும் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டிருப் பதாகவும் குறிப்பிட்டார். பயிற்சி நிலை ஊழியர்களையும் வரவேற்று ஊக்குவிப்ப தாக தெரிவித்தார்.

நிகழ்ச்சியின் இரண்டாம் கட்டமாக, டி.ஆர்.டி.ஓ ஆய்வு விஞ்ஞானி ராஜேஷ் பிள்ளை, சைபர் பாதுகாப்பு ஆய்வுக் கான அடிப்படைகளை பகிர்ந்து கொண்டார். சிப் உள்ளிட்ட முக்கிய சாதனங்கள் உள் நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுவதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

‘செட்ஸ்’ அமைப்பில் உள்ள இளம் விஞ்ஞானிகள் தங்கள் திட்டங்கள் குறித்து விவரித்தனர். செட்ஸ் அமைப்பின் அதி நவீன ஆய்வக வசதிகள் தொடர்பான காட்சி விளக்கம் அளித்து வியக்க வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x