

கடந்த ஆண்டு சென்னையில் போதிய அளவு மழை பெய்யாத தால், இந்த ஆண்டு பிப்ரவரி மாதமே வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியது. இதனால், தினசரி மின்தேவை அதிகரிக்கத் தொடங்கியது.
இதன் காரணமாக, 14,500 மெகாவாட் முதல் 15 ஆயிரம் மெகா வாட்டாக இருந்த இருந்த தினசரி மின்தேவை 16 ஆயிரம் மெகாவாட்டை தாண்டியது. இந்நிலையில் தற்போது பள்ளி கள் திறந்துள்ளதால் தினசரி மின்தேவை மேலும் அதிகரித்துள் ளது.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறும் போது, “இந்த ஆண்டு பிப்ர வரி மாதமே வெயில் சுட்டெரிக் கத் தொடங்கியதால் ஏசி, மின்விசிறி உள்ளிட்ட மின் சாத னங்களின் பயன்பாடு அதிகரித் தது. இதன் விளைவாக, தினசரி மின்தேவை 16 ஆயிரம் மெகா வாட் அளவை தாண்டியது.
இந்நிலையில், பள்ளிகள் திறப்பால் மின்தேவை மேலும் அதிகரித்துள்ளது. தற்போது தினசரி மின்தேவை 16,500 மெகாவாட்டை தாண்டியுள்ளது.
எனினும், மின்பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க போதிய அளவு மின்னுற்பத்தியும் செய்யப்பட்டு வருகிறது. இதனால், மின்தடை ஏற்படாது” என்றார்.