மின்சாரப் பேருந்துகள் எப்போது?- அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்

மின்சாரப் பேருந்துகள் எப்போது?- அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்
Updated on
1 min read

சென்னையில் மின்சாரப் பேருந்துகளை இயக்குவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் போக்குவரத்துத் துறை தலைமைச் செயலர் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்துக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார்.

நிதி நிலையை மேம்படுத்துதல், புதிய பேருந்துகள் இயக்கம், வசூல் நிலவரம், கூடுதல் பேருந்துகளை இயக்குவது தொடர்பாக இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதையடுத்துப் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ''பொதுமக்களுக்குத் தரமான போக்குவரத்து சேவைகளை வழங்க வேண்டும். சென்னையில் மின்சாரப் பேருந்துகளை இயக்குவதற்கான வழித்தடங்கள், அவற்றுக்கான சார்ஜிங் பாயிண்ட் அமைப்பது குறித்து முதல்வர் விரைவில் அறிவிப்பார்'' என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in