Published : 27 Jun 2019 04:23 PM
Last Updated : 27 Jun 2019 04:23 PM

‘இந்து தமிழ் திசை’ நடத்தும் TNEA -2019 ஆன்லைன் அட்மிஷனுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி: சென்னையில் வரும் 29-ம் தேதி  நடக்கிறது

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் ‘சாய்ராம் இன்ஸ்டிடியூசன்ஸ்’உடன் இணைந்து நடத்தும் ‘உயர்வுக்கு உயர் கல்வி’ எனும் பிளஸ் 2 முடித்தவர்களுக்கு மேற்படிப்புக்கான வழிகாட்டு நிகழ்ச்சி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திலுள்ள CUIC அரங்கில் வரும் சனிக்கிழமை (ஜூன் - 29) காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற உள்ளது.

பிளஸ் 2 முடித்தவர்கள் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பித்து இருக்கிறார்கள். பொறியியலில் எந்த பாடப்பிரிவை எடுத்துப் படிக்க வேண்டும், தங்களுக்குப் பிடித்தமான கல்லூரியை, விருப்பமான பாடப்பிரிவை ஆன்லைனில் எவ்வாறு தேர்வு செய்ய  வேண்டும் என்ற கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்குமான  பதில்களை நேரடியாக கேட்டுப் பெறும் நோக்கிலும் நடைபெறும் ‘உயர்வுக்கு உயர் கல்வி’ நிகழ்ச்சியில், பிரம்மோஸ் விண்வெளி நிறுவனத்தின் நிறுவனர் பத்மபூஷன் டாக்டர் ஏ.சிவதாணுபிள்ளை, ராணுவ விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான வி.டில்லிபாபு, TNEA ஆன்லைன் தொடர்பான கேள்விகளுக்கு விளக்கங்களை அளிக்க TNEA செயலாளரும் DOTE அதிகாரியுமான டாக்டர் டி.புருஷோத்தமன் ஆகியோர் உரையாற்றவிருக்கிறார்கள்.

இந்த நிகழ்வு தங்கள் வாழ்வின் உயர்வுக்கு வழிகாட்டும் நிகழ்வு.

தவறாது வாருங்கள்... பயன்பெறுங்கள்..!

பதிவு செய்ய: http://bit.ly/31LdhS6

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x