Published : 12 Jun 2019 14:56 pm

Updated : 12 Jun 2019 14:56 pm

 

Published : 12 Jun 2019 02:56 PM
Last Updated : 12 Jun 2019 02:56 PM

சென்னை நோக்கிச் சென்ற வைகை ரயிலின் கொக்கி துணை தண்டவாளத்தை இழுத்துச் சென்றதால் பரபரப்பு

மதுரையிலிருந்து இன்று காலை சென்னை நோக்கி புறப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மணப்பாறை அருகே சென்றபோது ரயிலின் கொக்கி துணை தண்டவாளத்தை இழுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

துணைத் தண்டவாளத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது.


மதுரையிலிருந்து தினமும் காலை 7 மணியளவில் வைகை எக்ஸ்பிரஸ் புறப்படுகிறது. இது பிற்பகல் 2.45 மணியளவில் சென்னை சென்றடைகிறது.

இந்நிலையில், இன்று காலை மதுரையிலிருந்து புறப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சி மணப்பாறை அருகே சிறு அசம்பாவிதத்தை சந்தித்தது.

லெவல் கிராஸிங் எனும் பகுதியில் துணை தண்டவாலம் அமைக்கப்படுவது வழக்கம். இன்று வந்த வைகை ரயிலில் இருந்த கொக்கி ஒன்று கீழே கழன்று தொங்கியபடி வந்ததால் அது வெலவல் கிராஸிங்கில் இருந்த துணை தண்டாவளத்தில் மாட்டியுள்ளது. ரயில் சென்ற வேகத்தில் அது துணை தண்டவாளத்தை பெயர்த்துச் சென்றது. ஆனால், ஓட்டுநர்களின் சாமர்த்தியத்தால் விபத்து ஏதும் நடைபெறாமல் தவிர்க்கப்பட்டது.

ஆனால், அதற்குள் சில தொலைக்காட்சிகளில் வைகை ரயில் விபத்து என்றவாறு செய்திகள் வெளியானதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. பின்னர் தெளிவான தகவல் வெளியான நிலையில் பரபரப்பு அடங்கியது.

வெறும் 8 நிமிடங்கள் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது.


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x