Published : 14 Jun 2019 02:38 PM
Last Updated : 14 Jun 2019 02:38 PM

கலாச்சாரத்தைக் களவாடப் பார்க்கிறவர்கள் மொழியின் குரல்வளையைப் பிடிக்கப் பார்க்கிறார்கள்: கவிஞர் வைரமுத்து கண்டனம்

ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கும் ஸ்டேஷன் மாஸ்டர்களுக்கும் இடையேயான தொடர்பு மொழி இனி இந்தி அல்லது ஆங்கிலமாக மட்டுமே இருக்க வேண்டும் என தெற்கு ரயில்வே சுற்றறிக்கை அனுப்பியுள்ளதற்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,

"இருப்புப்பாதை அதிகாரிகள் தமிழ் பேசக்கூடாதாம்.

ஆடு திருடுகிறவன் முதலில் பிடிப்பது

ஆட்டின் குரல்வளையைத்தான்.

கலாச்சாரத்தைக் களவாடப் பார்க்கிறவர்கள்

மொழியின் குரல்வளையைப் பிடிக்கப் பார்க்கிறார்கள்.

வேண்டாம் இந்த வேண்டாத விளையாட்டு" எனப் பதிவிட்டுள்ளார்.

மதுரை ரயில்வே கோட்டத்தில் கடந்த மே 9-ம் தேதி திருமங்கலம் ரயில் நிலையத்தில் இருந்து செங்கோட்டை பயணிகள் ரயில் கள்ளிக்குடி நோக்கியும், கள்ளிக்குடி ரயில் நிலையத்தில் இருந்து மதுரை பயணிகள் ரயில் திருமங்கலம் நோக்கியும் ஒரே நேரத்தில் புறப்படஅனுமதி அளிக்கப்பட்டது. இந்த இரண்டு ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே வந்தன. கடைசி நேரத்தில் இந்த ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்துதவிர்க்கப்பட்டது. ஒருவர் இந்தியிலும், மற்றொருவர் ஆங்கிலத்திலும் தகவல்கள் பரிமாறிக் கொண்டதும், ஒருவர் பேசியது மற்றொருவருக்கு புரியாமல் இருந்ததும் விபத்துக்கு காரணம் என்று கண்டறிப்பட்டது.

இந்நிலையில், தெற்கு ரயில்வே நேற்றைய தேதியில் தெற்கு ரயில்வே ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கும் ஸ்டேஷன் மாஸ்டர்களுக்கும் இடையேயான தொடர்பு மொழி இனி இந்தி அல்லது ஆங்கிலமாக மட்டுமே இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. இதற்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அந்த வரிசையில் கவிஞர் வைரமுத்து தனது கண்டனத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x