Published : 26 Jun 2019 08:30 AM
Last Updated : 26 Jun 2019 08:30 AM

உயர்கல்வித் துறை சார்பில் ரூ.186 கோடியில் வகுப்பறை, விடுதி கட்டிடங்கள்: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார் 

உயர்கல்வித் துறை சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் ரூ.185 கோடியே 70 லட்சத்து 30ஆயிரத்தில் கட்டப்பட்ட வகுப்பறைகள், ஆய்வ கங்கள், கருத்தரங்க கூடங்கள், விடுதி கட்டிடங்களை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

உயர்கல்வித் துறையின்கீழ் செயல்படும் அரசுக் கல்லூரிகளின் உள்கட்டமைப்புகளை மேம் படுத்தும் வகையில், தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ.9 கோடியே 32 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 24 வகுப்பறைகள், 4 ஆய்வகங்கள், நூலகம், கருத்தரங்கக் கூடம், நிர்வாகப் பிரிவு கட்டிடங்களை முதல்வர் பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

மேலும், கிருஷ்ணகிரி - ஆடவர் கலைக்கல்லூரி, மகளிர் கல்லூரி, பர்கூர் மகளிர் கல்லூரி, விழுப்புரம் - திண்டிவனம் ஏ.கோவிந்தசாமி கலைக்கல்லூரி, வேலூர் நரியனேரி திருவள்ளூர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி, சென்னை- சைதாப்பேட்டை கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் அரசு கல்லூரி, ஜார்ஜ் டவுன் - பாரதி மகளிர் கல்லூரி, சேப்பாக்கம் மாநில கல்லூரி ஆகிய கல்லூரிகளில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கள் உள்ளிட்ட கட்டிடங்களையும் அவர் திறந்து வைத்தார்.

இதுதவிர, ஈரோடு பெருந்துறை அரசு பாலிடெக்னிக், கோவை - அரசு பொறியியல் கல்லூரி, மேட்டுப்பாளையம் அரசு கல்லூரி, பாரதியார் பல்கலைக்கழகம், திருப்பூர் - அவிநாசி கலை அறிவியல் கல்லூரி, திருவாரூர் திருவிக அரசு கலைக் கல்லூரி, கும்பகோணம் அரசு மகளிர், அரசு கலைக் கல்லூரிகள், ஒரத்தநாடு கல்வியல் கல்லூரி மற்றும் கடலூர், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள அரசு கல்லூரிகளில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை, விடுதி உள்ளிட்ட ரூ.185 கோடியே 70 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடங்களை முதல் வர் திறந்து வைத்தார்.

தொழிலாளர் துறை

மேலும், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை சார்பில், திருவண்ணாமலை, நாமக்கல் மாவட்டங்களில் உள்ள ஐடிஐ.க் களில் ரூ.7 கோடியே 73 லட்சத் தில் தொழிற்பயிற்சி நிலைய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. நாமக்கல், மதுரை, தேனி மற்றும் ராமநாதபுரத்தில் உள்ள ஐடிஐ.க் களில் ரூ.3 கோடியே 32 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைகள், சிவகங்கை கஞ்சிரங்காவில் ரூ.1 கோடியே 96 லட்சத்தில் கட்டப்பட்ட தொழிலாளர் அலுவலர் வளாக கட்டிடம் ஆகியவற்றை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன், நிலோபர் கபீல், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், உயர்கல்வித் துறைச் செயலர் மங்கத்ராம் சர்மா, தொழிலாளர் துறைச் செயலர் சுனீல் பாலிவால், தொழில்நுட்ப கல்வி இயக்குநர் கே.விவேகானந்தன், வேலைவாய்ப்பு பயிற்சித் துறை ஆணையர் ஜோதி நிர்மலாசாமி, தொழிலாளர் ஆணையர் ஆர்.நந்தகோபால் ஆகியோர் பங் கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x