Last Updated : 14 Jun, 2019 07:25 AM

 

Published : 14 Jun 2019 07:25 AM
Last Updated : 14 Jun 2019 07:25 AM

சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு உச்சக்கட்டம்; ஐடி நிறுவனம், ஓட்டல்கள் முடங்கின: வீட்டில் இருந்து பணியாற்ற 20 ஆயிரம் ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்

சென்னையில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு, உச்சக்கட்டத்தை அடைந் துள்ளது. இதன்காரணமாக ஊழியர் களை வீட்டில் இருந்து பணியாற்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன. தண்ணீர் கிடைக்காததால் ஓட்டல்களும் மூடப் படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திரு வள்ளூர் மாவட்டங்களில் கடந்த 3 ஆண்டுகளாக பருவமழை பொய்த்து விட்டது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. குடிநீர் வழங்கும் ஏரிகளும் அடியோடு வறண்டதால், சென்னையின் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி, தொழிற்சாலைகள், வணிக நிறு வனங்களும் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளன.

தண்ணீர் பற்றாக்குறை காரண மாக, சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மூடப் படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஊழியர்கள் வீட்டில் இருந்தோ அல்லது பெங்களூர், ஹைதராபாத் ஆகிய இடங்களுக்கு சென்றோ பணியாற்றுமாறு வலியுறுத்தப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் தொழில் நுட்ப நிறுவன ஊழியர்களின் தொழிற்சங்கத் தலைவர் டி.பரணி கூறியதாவது:

சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் 650 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் லட்சக்கணக்கானோர் பணிபுரி கின்றனர். இந்த சாலையில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங் களுக்கு தினமும் 30 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதில், 60 சதவீதம் தண்ணீர் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மட்டுமே வேண்டும். தினமும் 4 ஆயி ரம் லாரிகள் தண்ணீர் எடுத்துவந்து விநியோகிக்கின்றன.

இதுவரை இல்லாத அளவுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்ப தால், தகவல் தொழில்நுட்ப நிறுவனங் களில் குடிநீருக்கும், அத்தியாவசிய தேவைகளுக்கும் தண்ணீர் இல்லை. அதனால் தினசரி செயல்பாடு கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. தீத்தடுப்பு பணிக்காக தகவல் தொழில் நுட்ப நிறுவன வளாகத்தில் உள்ள குளம், குட்டைகளில் தேக்கி வைக்கப் பட்டிருந்த தண்ணீரும் பயன்படுத் தப்பட்டுவிட்டன. தீ விபத்து ஏற்பட் டால், அதை அணைக்கக்கூட தண்ணீர் இல்லாத நிலைதான் உள்ளது.

எனவே, பல பெரிய நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்யுமாறு வலி யுறுத்தி வருகின்றன. இல்லாவிட்டால் பெங்களூர், ஹைதராபாத் போன்ற நக ரங்களில் உள்ள அலுவலகங்களுக்கு சென்று அங்கிருந்து பணியாற்றுமாறு தெரிவித்துள்ளன. அதன்படி, 20 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களிடம் பணிபுரியும் மென்பொருள் பொறியாளர்கள் உட்பட சுமார் 20 ஆயிரம் பேரை வீட்டில் இருந்து பணிபுரியுமாறு உத்தரவிட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

சிப்காட் ஐடி பார்க் உயர் அதி காரி கூறும்போது, “எங்கள் வளாகத் தில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறு வனங்களுக்கு உறுதி அளித்த அள வுக்கு தண்ணீர் வழங்க முடியவில்லை. அதில் பாதி அளவு தான் வழங்க முடி கிறது. சிப்காட் வளாகத்தில் உள்ள கிணறுகளில் சில மாதங்களுக்கு முன்பு கிடைத்த அளவில் தற்போது பாதி அளவுதான் தண்ணீர் கிடைக்கிறது. மீதி தேவைக்கு லாரி தண்ணீரைத்தான் பயன்படுத்துகிறோம்’’ என்றனர்.

ஓட்டல்கள் மூடல்?

குடிநீர் பஞ்சம் காரணமாக சென்னையில் உள்ள பல ஓட்டல் கள் மூடப்படும் அபாயமும் ஏற் பட்டுள்ளது. தேனாம்பேட்டை எல் டாம்ஸ் சாலை - அண்ணா சாலை சந்திப்பில் உள்ள ஒரு பிரபல ஓட்டலின் தகவல் பலகையில், தண்ணீர் இல்லாத காரணத்தால் சேவையை நிறுத்த வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த ஓட்டலின் மேலாளர் கே.எஸ்.ஜவகர் கூறும் போது, ‘‘எங்களுக்கு தினமும் 50 ஆயிரம் லிட்டர் குடிநீர் தேவைப் படுகிறது. கடந்த இரு மாதங்களாக குடிநீர் பற்றாக்குறை நிலவினாலும், நிலத்தடி நீர், லாரி குடிநீர் ஆகியவை கை கொடுத்தது. இப்போது ஆழ்துளை கிணறுகள் வறண்டுவிட்டன. லாரி குடிநீரின் விலை ரூ.4 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டாலும், நேரத் தோடு கிடைப்பதில்லை. வரும் குடிநீரும் மஞ்சள், பழுப்பு நிறத்தில் உள்ளன. அதைக்கொண்டு சமைக்க முடியாது. குடிநீர் கிடைக்காத பட்சத் தில் ஓட்டலை மூட திட்டமிட்டிருக் கிறோம்’’ என்றார்.

‘‘சென்னையில் சிறு, நடுத்தர மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் என மொத்தம் 50 ஆயிரம் ஓட்டல்கள் உள்ளன. இவற்றுக்கு அடிப்படை தேவையாக குடிநீர் உள்ளது. தற் போது நிலவும் குடிநீர் பஞ்சத்தால் சில தினங்களில் சுமார் 50 சதவீத ஓட் டல்களை மூடவேண்டிய கட்டாயத்தில் உரிமையாளர்கள் உள்ளனர். இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு உரிய தீர்வை அளிக்க வேண்டும்’’ என சென்னை ஓட்டல்கள் அசோசி யேஷன் தலைவர் ரவி தெரிவித்தார்.

தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர் சங்க மாநில செயலர் எஸ்.முருகன் கூறியதாவது:

சென்னையில் 4, 500 குடிநீர் லாரி கள் இயக்கப்படுகின்றன. தட்டுப்பாடு இல்லாத நேரத்தில் பூந்தமல்லி அருகே குடிநீர் எடுத்து 12 ஆயிரம் லிட்டர் நீரை ரூ.1,200-க்கு கொடுத்து வந்தோம். தற்போது பூந்தமல்லியில் நீர் கிடைக்கவில்லை. பல கி.மீ. தொலைவு சென்று குடிநீர் கொண்டு வரப்படுகிறது. அதனால், தற்போது தண்ணீருக்கு ரூ.3 ஆயிரம் வரை வசூலிக்கிறோம்.

கிராமப்புறங்களில் குடிநீர் எடுக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன் காரணமாக ஓட்டல்களுக்கு போதிய அளவு குடிநீரை வழங்க முடியவில்லை. இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு, விவசாய கிணறுகளில் இருந்து நீர் எடுக்க அனுமதி வழங்க வேண்டும்.

இவ்வாறு முருகன் கூறினார்.

சென்னை குடிநீர் வாரிய அதி காரிகளிடம் இதுபற்றி கேட்டபோது, “பல்வேறு ஆதாரங்களில் இருந்து குடிநீரை பெற்று கடும் சிரமத் துக்கிடையே பொதுமக்களின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. அதனால், வணிக தேவையை பூர்த்தி செய்ய வாய்ப்பில்லை” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x