

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு வெளியானதையடுத்து அதிமுக-வினர் கடும் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். புதுக்கோட்டையில் திமுக, தேமுதிக அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
புதுக்கோட்டை வடக்குத் தெருவில் உள்ள திமுக அலுவலகத்தை முற்றுகையிட்ட அதிமுக-வினர் கற்களால் அடித்து உடைத்தனர். இதில் கண்ணாடிகள் சிதறின.
மேலும் சில அதிமுக-வினர் புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் உள்ள லஷ்மிபுரத்தில் தேமுதிக அலுவலகத்தில் புகுந்து கண்ணில் பட்டதையெல்லாம் அடித்து நொறுக்கினர்.
புதுக்கோட்டை மேற்கு 4ஆம் தெருவில் உள்ள மறைந்த முன்னாள் எம்.பி. வீரையாவின் வீடுகளுக்குக் கடும் சேதம் விளைவித்தனர். இவரது இல்லத்திற்குப் பின்புறம் உள்ள இந்தக் குடும்பத்திற்குச் சொந்தமான அரிசி ஆலையும் சேதப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கியில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.