Last Updated : 05 Jun, 2019 08:20 AM

 

Published : 05 Jun 2019 08:20 AM
Last Updated : 05 Jun 2019 08:20 AM

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் 25 மில்லியன் லிட்டர் குடிநீர் கொண்டு செல்ல முடிவு: ஆயத்தப் பணிகளில் அதிகாரிகள் தீவிரம்

சென்னையில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையைச் சமாளிக்க ஜோலார் பேட்டையில் இருந்து ரயில்கள் மூலம் காவிரி கூட்டுக் குடிநீரை சென்னைக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்கி வந்த பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளும் தற்போது வறண்டு விட்டன. இந்த 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,257 மில்லியன் கன அடியாகும். இந்த ஏரிகள் வறண்டு விட்டதால், சென்னை மாநகர மக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

இந்நிலையில், குடிநீர் தட்டுப்பாட் டைப் போக்க மாற்று ஏற்பாடுகளை சென்னை குடிநீர் வாரியம் மேற்கொண் டுள்ளது. அதன்படி, சென்னையை ஒட் டியுள்ள 22 கல்குவாரிகளில் இருந்து 30 மில்லியன் லிட்டர் தண்ணீர் பெறப்பட்டு அதை சுத்திகரித்து மக்களுக்கு குடி நீராக வழங்கப்பட்டது. இந்த தண்ணீர் அளவும் படிப்படியாகக் குறைந்து வரு கிறது. வீராணம் ஏரியில் இருந்து விநியோகிக்கப்படும் குடிநீர் மற்றும் மீஞ்சூரில் கடல் நீரைச் சுத்திகரித்து பெறப்படும் குடிநீரும் சென்னை மக்களின் குடிநீர் தேவையை சொற்ப அளவே பூர்த்தி செய்துள்ளது எனக் கூறப்படுகிறது.

மேலும், ஆந்திர மாநிலம் கண்ட லேறு அணையில் இருந்து சென்னைக்கு வரும் தண்ணீர் அளவும் எதிர்பார்த்தபடி இல்லாததால் குடிநீர் வாரியம் செய்வ தறியாமல் திகைத்து வருகிறது. தற்போ தைய நிலையில், சென்னை மக் களுக்கு தினசரி 1,200 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. ஆனால், தற்போது 525 மில்லியன் லிட்டர் குடிநீர் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து 316 விவசாயக் கிணறுகள், 40 ஆழ்துளைக் கிணறுகள் மூலம் சென்னை நகர மக்களுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.

கடந்த 2001-ம் ஆண்டு சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டபோது, ஈரோடு மற்றும் நெய்வேலியில் இருந்து ரயில்கள் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு வரப்பட்டது. தற்போது, அதே நடைமுறையில் சென்னைக்கு ரயில்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்ல முடியுமா என்று அதிகாரிகள் ஆலோசித்தனர்.

அதன்படி, வேலூர் மாவட்டத்துக்கு கொண்டு வரப்படும் காவிரி கூட்டுக் குடிநீரை சென்னைக்கு ரயில் மூலம் கொண்டு செல்ல குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து, காவிரி கூட்டுக் குடிநீர் வரும் பாதைகளில், சென்னைக்கு ரயில் பாதைகள் உள்ள பகுதிகளில் இருந்து குடிநீரைக் கொண்டு செல்ல அதிகாரிகள் கடந்த 2 வாரங்களாக ஆய்வு செய்தனர்.

அதில், ஜோலார்பேட்டையில் இருந்து ரயில்கள் மூலம் குடிநீர் எடுத் துச்செல்ல முடிவு செய்தனர். அதன்படி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணி யம்பாடி, ஆம்பூர் மற்றும் வேலூர் ஆகிய பகுதிகளில் இருந்து ரயில்கள் மூலம் காவிரி கூட்டுக் குடிநீர் எடுக்க சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முதற்கட்டமாக ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே உள்ள காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட ராட்சதக் குழாய்களில் இருந்து ரயில்கள் மூலம் குடிநீர் எடுத்துச்செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஜோலார்பேட்டையில் இருந்து ரயில்கள் மூலம் கொண்டு செல்லப்படும் குடிநீர் வில்லிவாக்கம் குடிநீரேற்று நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு சென்னை நகர மக்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சி யாக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் எங்கெல்லாம் தண்ணீர் உபரியாக உள்ளதோ அங்கிருந்து சென்னைக்கு தண்ணீரைக் கொண்டு செல்ல ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x