Published : 12 Jun 2019 09:17 AM
Last Updated : 12 Jun 2019 09:17 AM

கீழடியில் 5-ம் கட்டமாக அகழாய்வு பணி 10 நாட்களாக நடக்கிறது: அமைச்சர் கே.பாண்டியராஜன் தகவல்

சிவகங்கை மாவட்டம் திருப்பு வனம் அருகே கீழடியில் 4 கட்டங் களாக அகழாய்வுப் பணிகள் நடை பெற்றன. இதில் 17 ஆயிரத்துக் கும் மேற்பட்ட தொல்பொருட் கள் கிடைத்தன. இதனிடையே 5-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் குறித்து அமைச்சர் கே.பாண்டிய ராஜன், ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது:

கீழடியில் தொல்லியல்துறை 2014-ம் ஆண்டு முதல் நடத்திய அகழாய்வில் 7,818 பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளன. சங்க கால மக்கள் வாழ்ந்ததற்கான தொல் லியல் சான்றுகள் இதன்மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

2017-18-ம் ஆண்டுக்காக தமிழக அரசு ரூ. 55 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. சுமார் 110 ஏக்கரில் அமைந்துள்ள தொல்லியல் மேட்டில் 34 அகழாய் வுக்குழிகள் அமைத்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் 5,820 தொல்பொருட்கள், சிறு கட்டடப்பகுதிகள் வெளிக்கொண ரப்பட்டன.

மத்திய அரசின் 3 ஆண்டு ஆய்வுக்குப் பின் 4-ம் ஆண்டாக தமிழக அரசு தொல்லியல் துறை மேற்கொண்டது. கீழடியில் தொடர் அகழாய்வு மேற்கொண்டு தமிழர்களின் பண்டைய அரசியல் பொருளாதார மேன்மைகளை வெளிக்கொணரும் வகையில் தொல்லியல்துறை நடப்பாண்டி லும் தொடர்ந்து அகழாய்வு மேற்கொள்ள திட்டமிட்டது.

இதற்காக மத்திய தொல்லியல் ஆலோசனைக்குழுவின் அனுமதி பெறப்பட்டுள்ளது. 5-ம் கட்ட ஆய்வுக்காக மாநில அரசு ரூ. 47 லட்சம் நிதியும் ஒதுக்கீடு செய்தது. ஆய்வு செய்வதற்குரிய இடத்தை தேர்வுசெய்ய கடந்த பிப்ர வரி 24-ல் தானியங்கி விமானம் மூலம் தொல்லியல் மேடுகள் கண்ட றியப்பட்டன. மேலும் மே 24 முதல் ஜூன் 6 வரை அகழாய்வு செய் வதற்கான 15 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

நில உரிமையாளர்களிடம் பேச்சு நடத்தி அனுமதியும் பெறப்பட்டது. இந்நிலங்களில் உள்ள புல், புதர் கள் அகற்றி சுத்தம் செய்யும் பணி கள் 10 நாட்களாக நடந்து வரு கிறது. இந்த முதன்மைப்பணிகள் நிறைவுற்ற நிலையில் அகழாய்வுப் பணிகள் தொடங்கவுள்ளது. இப் பணியை நாளை (ஜுன் 13)ஆய்வு செய்ய உள்ளேன்.

தொடக்க விழா என எந்த நிகழ்ச்சியும் கிடையாது. 10 நாட்களாகவே 5-ம் கட்ட ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. இதனை எனது வழக்கமான பணி யாகவே நாளை ஆய்வு செய்ய செல் கிறேன். நேற்று முன்தினம் ஆய்வு செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணத்தால் நாளை செல்கிறேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x