Published : 22 Jun 2019 08:11 AM
Last Updated : 22 Jun 2019 08:11 AM

ராஜராஜ சோழன் சர்ச்சை பேச்சு வழக்கு; ரஞ்சித் மீதான கைது தடையை நீட்டிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு: எந்த நேரத்திலும் கைதாகலாம்

ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக் குரிய வகையில் பேசியது தொடர் பான வழக்கில் திரைப்பட இயக்கு நர் பா.ரஞ்சித்தை கைது செய்வ தற்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந் தாளில் கடந்த ஜூன் 5-ல் நீலப்புலி கள் அமைப்பின் நிறுவனர் டிஎம் மணி என்ற உமர் பாரூக்கின் நினைவு தினத்தில் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் பேசினார். அப்போது ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகை யில் பேசியதாக ரஞ்சித் மீது திருப்பனந்தாள் போலீஸார் வழக் குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு ரஞ்சித் உயர் நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய் தார். அதில், ராஜராஜ சோழனின் வரலாற்று உண்மைகள் சிலவற் றைக் குறிப்பிட்டேன். உள் நோக் கத்துடன் எதையும் பேசவில்லை. என்னைப் போல பலர் பேசிய போதும், என் பேச்சை மட்டும் சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். இதனால் முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, ரஞ்சித்தை இப்போதைக்கு கைது செய்யமாட்டோம் என திருப்பனந் தாள் போலீஸார் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ராஜமாணிக்கம் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ரஞ்சித்துக்கு ஆதரவாக மதுரை யைச் சேர்ந்த இளந்தமிழன் சார் பில் வழக்கறிஞர் ரஜினி மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார்.

ரஞ்சித்துக்கு முன்ஜாமீன் வழங் கக்கூடாது என ஏற்கெனவே மனுத் தாக்கல் செய்துள்ள வழக்கறிஞர் முத்துக்குமார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கே.நீலமேகம், முகமது ரஸ்வி ஆகியோரும் இளந் தமிழன் மனுவுக்கு ஆட்சேபம் தெரிவித்தனர்.

பின்னர் ரஞ்சித் தரப்பிலும், இளந்தமிழன் சார்பிலும் வழக்கு தொடர்பாக பல்வேறு நீதிமன்ற உத்தரவுகளைத் தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதை அடுத்து விசாரணையை ஜூன் 24-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

அதுவரை ரஞ்சித் கைதுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்குமாறு விடுத்த கோரிக்கையை ஏற்க நீதிபதி ராஜமாணிக்கம் மறுத்துவிட்டார். இதனால் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x