Published : 05 Sep 2014 09:30 AM
Last Updated : 05 Sep 2014 09:30 AM

சென்னைக்கு அனுப்பிய ஆவின் பாலில் 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கலப்படம்: சிபிசிஐடி போலீஸ் விசாரணையில் அம்பலம்

வேலூர் மாவட்ட ஆவினில் இருந்து சென்னைக்கு அனுப்பப்பட்ட பாலில் தினமும் சுமார் 10 ஆயிரம் லிட்டர் திருடப்பட்டு தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்பட்டுள்ளது. திருடிய பாலுக்குப் பதிலாக, அதே அளவு தண்ணீர் கலப்படம் செய்யப்பட்டது சிபிசிஐடி போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

வேலூர், திருவண்ணாமலை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தில் தினமும் சுமார் 3 லட்சம் லிட்டர் பால் கொள் முதல் செய்யப்படுகிறது. இதில் சுமார் 2 லட்சம் லிட்டர் பால் சென்னைக்கு டேங்கர்கள் மூலம்

அனுப்பப்படுகிறது. அதன்படி, திருவண்ணாமலை குளிரூட்டும் நிலையத்தில் இருந்து கடந்த மாதம் 19-ம் தேதி இரவு டேங்கர் லாரிகளில் வழக்கம்போல் சென்னைக்கு பால் அனுப்பப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் திண்டி வனம் அருகே உள்ள கோவிந்தபுரம் கிராமத்தில் வெள்ளிமேடு காவல் நிலைய போலீஸார் நடத்திய திடீர் சோதனையில், ஆவின் பால் டேங்கரில் இருந்து மினி லாரியில் சுமார் ஆயிரத்து 600 லிட்டர் பால் கடத்த முயன்றதும் அதே அளவு தண்ணீரை டேங்கரில் கலந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக திருவண்ணா மலையைச் சேர்ந்த சுரேஷ், சத்திய ராஜ், ராணிப்பேட்டை அன்பு உள்ளிட்ட 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இந்த மோசடி சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் விவசாயிகளிடம் இருந்து பால் கொள்முதல் செய்யப் படும் இடங்கள், அங்கிருந்து குளிரூட்டும் மையங்களுக்கு செல்லும் வழி, பின்னர் டேங்கர் கள் மூலம் சென்னைக்கு அனுப்பிவைக்கும் நடைமுறை குறித்த தகவல்களை சிபிசிஐடி போலீஸார் சேகரித்துள்ளனர். மேலும், ஒப்பந் தம் பெற்றுள்ள டேங்கர் லாரி உரிமையாளர்கள், அவர்களது பின்னணி, அவர்களுக்கு செய்யப்பட்டுள்ள பணப் பட்டுவாடா, போன்ற ஆவணங் களையும் போலீஸார் திரட்டியுள்ளனர்.

இதுகுறித்து பெயர் கூற விரும்பாத சிபிசிஐடி அதிகாரி கூறும்போது, ‘‘திருடப்படும் பாலினை, கேன்களில் நிரப்பி திமிரி, ஆற்காடு, சோளிங்கர் வழி யாக கொண்டுசென்று, தமிழக- ஆந்திர எல்லையில் உள்ள ஒரு தனியார் பால் நிறுவனத்துக்கு விற்றுள்ளார்கள்.

ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தில் வைக்கப்படும் சீல் தரமான தாக இல்லை. டேங்கரில் சீல் உடைக்கப்பட்டு பாலை திருடியதும் மீ்ண்டும் அதே சீலை பயன்படுத்தி ஒட்டி வைத்துவிடுவார்கள். இதை சென்னையில் யாரும் கண்டு கொள்வதில்லை.

ஒரு முக்கிய நபர் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங் களில் இருந்து சென்னைக்கு டேங்கரில் பால் எடுத்துச் செல்லும் ஒப்பந்தம் பெற்றுள்ளார். இவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆவினில் பியூனாக வேலை செய்தவர். இன்று அவர் ஆவினில் பலம் படைத்த நபராக இருக்கிறார். டேங்கர் லாரிகளில் இருந்து திருடப்படும் பால்

தனியார் நிறுவனங்களுக்கு விற்கப் பட்டது குறித்து தீவிரமாக விசாரிக்கப்படும்.இந்த மோசடி குறித்து சிபிசிஐடிஐஜி மகேஷ்குமார் அகர்வால் தலை மையில் டிஐஜி கணேசமூர்த்தி, எஸ்பிக்கள் அன்பு, நாகஜோதி ஆகியோர் கொண்ட தனிப்படை போலீஸார் விசாரிக்கிறார்கள். விசாரணையின் முடிவில் முக்கிய நபர்கள் பலர் கைது செய்யப்படலாம். வரும் நாட்களில் ஆவின் பால் கலப்பட மோசடி குறித்து விசாரணை தீவிரமாகும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x