Published : 01 Jun 2019 01:17 PM
Last Updated : 01 Jun 2019 01:17 PM

தமிழகத்தில் இருமொழிக்கொள்கையே பின்பற்றப்படும்: மத்திய அரசின் மும்மொழி கொள்கை பரிந்துரை குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடர்ந்து பின்பற்றப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கான வரைவுத் திட்டத்தில் ஒரு அம்சமாக நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த பரிந்துரைக்கப்பட்டு கருத்து கேட்கப்பட்டு வருகிறது, அதில் கூறப்பட்டுள்ள ஒரு அம்சம் சர்ச்சையை எழுப்பியுள்ளது. தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை பின்பற்றப்படும் நிலையில், மீண்டும் இந்தி திணிப்பு முயற்சி நடைபெறுவதாக எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்த பரிந்துரையில் ஒன்றாக மும்மொழிக்கொள்கை குறித்து கூறப்பட்டுள்ளது. அதில் தாய் மொழி, இணைப்பு மொழியாக ஆங்கிலம் மூன்றாவது ஒரு அயல் மொழியை கட்டாயம் படிக்கவேண்டும் என்றும் இந்தி பேசும் மாநிலங்கள் தாய்மொழியான இந்தி இணைப்பு மொழியான ஆங்கிலம் மற்றும் 3 வது மொழியை தாங்களே தேர்வு செய்துக்கொள்ளலாம்.

இந்தி பேசாத மாநிலங்களில் தாய் மொழி, இணைப்பு மொழி ஆங்கிலம் தவிர 3 வது மொழியாக இந்தியை கட்டாயப்பாடமாக்க வேண்டுமென்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த கல்வி அமைச்சர் செங்கோட்டையன்,

“தமிழகத்தில் பின்பற்றப்படும் இரு மொழிக் கொள்கையில் எந்த மாற்றமும் செய்யப்போவது இல்லை என்றும், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் மும்மொழி பரிந்துரையை தமிழக அரசு ஏற்காது என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்தில் இருமொழிக்கொள்கை குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆகவே இருமொழிக்கொள்கையில் அரசு உறுதியாக உள்ளது.

நாளை மறுதினம் 12 ஆண்டுகளுக்குப்பிறகு புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. அது முதல்வர் கையால் தொடங்கி வைக்கப்பட உள்ளது. 2,3,4,5,7,8,10,12 ஆகிய 8 வகுப்புகளுக்கும் புதிய மாற்றத்தோடு பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது தமிழகம் தாண்டி அதை இந்தியாவே வரவேற்கும் வகையில் இருக்கும்”யஎன அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x