

நதிகளை தேசியமயமாக்கும் திட்டம் மத்திய அரசுகு இல்லை என மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா முன்வைத்த கேள்விக்கு மத்திய ஜல் சக்தி, சமூக நீதி, அதிகாரமளித்தல் துறைகளுக்கான அமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா பதிலளித்துள்ளார்.
மாநிலங்களவையில் இன்று (திங்கள்கிழமை) நதி நீர் இணைப்பு குறித்து திருச்சி சிவா கேள்வி எழுப்பினார். அதில், நதிகள் தேசியமயமாக்கப்படுமா என்ற கேள்வியையும் முன்வைத்திருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா, மத்திய அரசிடம் நதிகளை தேசியமயமாக்கும் திட்டம் ஏதுமில்லை. காவிரி - குண்டாறு - வைகை இணைப்பை செயல்படுத்தப்படுவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டம் பற்றி பேசப்பட்டு வருகிறது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரியில் தண்ணீர் தட்டுப்பாடு குறையும் என்று நீர் மேலாண்மை வல்லுனர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நதிகள் இணைப்புத் திட்டம் பற்றி மட்டுமே மத்திய அரசு பரிசீலிக்கிறது நதிகளை தேசியமாக்கும் திட்டமேதுமில்லை என மத்திய அமைச்சர் பதிலளித்துள்ளார்.
இதனால், நதி நீர் இணைப்புத் திட்டங்கள் வேகமெடுக்கமா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.